Related posts

Breaking News

Justice League:The Flashpoint Paradox(2016) விமர்சனம்




கேட்டவுடன் அனைவரையும் ஈர்க்கும் விடயங்களுள் ஒன்றுதானே காலப்பிரயாணம்.அப்பேர்ப்பட்ட காலத்தை மாற்றும் கதைகள் பலவற்றை நாம் படித்திருக்கிறோம்,பார்த்தும் இருக்கிறோம்.திரு.H.G.Wells அவர்களின் "Time Machine" என்ற கதைதான் அனைத்து டைம் டிராவலிங் கான்செப்டுகளுக்கும் முன்னோடி.ஆயினும் இந்து புராணங்களிலும்(மகாபாரதம்:ரைவதா அரசன் கதை)கூட காலப் பிரயாணம் பற்றி ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளனர்.இதை வைத்து ஆயிரக்கணக்கில் திரைப்படங்களும் வந்து விட்டன.A connecticut Yankee in King Arthur's Court என்ற திரைப்படம்தான் முதலாவதாக வந்த டைம் டிராவலிங் திரைப்படமாக அறியப்படுகிறது.1921ல் வந்த இத்திரைப்படம் ஒரு சலனப்படமாகும்(Silent Movie).1967ல் H.G.Wellsனது நாவல் திரைப்படமாக எடுக்கப்பட்டது.(2002ல் இது மீளுருவாக்கம் செய்யப்பட்டது).இதன் பின்னர் 1985வாக்கில் வந்த Back to the future இன்றுவரை மிகவும் பிரபல்யமானதொரு டைம் டிராவலிங் திரைப்படமாகும்.தமிழ் திரைத்துறையை பொருத்தவரை சமீபத்தில் வந்த இன்று நேற்று நாளை மற்றும் 24 ஆகியவை நல்ல உதாரணங்கள்.ஆனால் இத்திரைப்படங்களில் சொல்லப்பட்டிருக்காத ஒரு விடயத்தை மையமாக வைத்து வெளிவந்த திரைப்படம்தான் இந்த Justice League:Flashpoint Paradox.Paradox என்பதை எளிமையாக முரண் என விளக்கலாம்.அறிவியலாலர்கள் இதனை Grandfather Paradox எனக் குறிப்பிடுவதும் உண்டு.சற்றே கற்பனை செய்து பாருங்கள்.நீங்கள் காலப்பிரயாணம் மேற்கொண்டு உங்கள் முன்னோர்களில் ஒருவரை கொன்று விடுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.இதனால் நீங்கள் உட்பட அவருக்கு பின் வந்த சந்ததியினர் அனைவருமே பிறந்து இருக்க மாட்டீர்கள் அல்லவா...ஆனால் இங்குதான் ஒரு சிக்கல் உள்ளது.உங்கள் சந்ததியில் எவருமே பிறக்கவில்லை என்னும் போது நீங்கள் எவ்வாறு பிறந்து,வளர்ந்து காலப்பிரயாணம் மேற்கொண்டு உங்கள் பாட்டனாரைக் கொல்ல முடியும்(😮!?).குழப்பமாக இருக்கிறதல்லவா...இந்த காலமுரண் என்னும் கருவைப் பயன்படுத்தி வெளிவந்த சூப்பர் ஹீரோ படம்தான் Justice League:Flashpoint Paradox.




இந்த காலமுரணைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெளிவாக அறிந்து கொள்ள சிறியதாக ஒரு கேமை விளையாடலாம்.மிகவும் சிம்பிள்.நீல நிற எழுத்துக்களில் உள்ள பந்தியை மீண்டுமொருமுறை பாருங்கள்.தொடங்கிய இடத்திலேயே முடிகிறதல்லவா...மீண்டும் படித்தாலும் அதேதான்.இது ஒரு Infinite loop(முடிவிலி வளையம்) போல மீண்டும் மீண்டும் நடைபெற்றுக்கொண்டே இருக்கும்.அதுதான் காலமுரண்.தெளிவாக ஒரு தீர்மானத்தை மேற்கொள்ள முடியாது.24படத்தில் கடந்த காலத்தை மாற்றி விடுவதால் எதிர்காலமும் மாறிவிடும்.ஆனால் Time machine படத்தில் காலத்தை மாற்றுவதென்பது முடியாத காரியமாக காட்டப்பட்டிருக்கும்.சரி இனியும் சுற்றி வளைக்காமல் கதைக்கு வருவோம்.

The Justice League:Flashpoint Paradox


DC மற்றும் JLA கதாபாத்திரங்கள் என்பனவற்றைப் பற்றி ஏற்கனவே நான் விலாவாரியாக எழுதிவிட்டேன்(அவற்றைப் படிக்க இங்கே க்ளிக்கவும்).இனி தொடங்கலாம்.

காலை நேரம்,உறக்கம் கலைந்து எழும் பெர்ரி ஆலன்(Flash) தன்னை சுற்றி பெரும் மாற்றம் நிகழ்ந்திருப்பதை உணர்கிறான்.
தன்னால் வேகமாக ஓட முடியவில்லை என்பதை அறிந்து கலக்கமுறுகிறான்...சற்று நேரத்தில் இறந்து போன தனது தாய் தன் கண்முன்னே இருப்பதை காண்கிறான்.அவனது காதலி இன்னொருவருக்கு மனைவியாக உள்ளாள்.இவை மட்டுமல்ல மாற்றங்கள்.


ப்ரூஸ் வேய்ன் சிறுவயதிலேயே இறந்து விட இப்பொழுது ப்ரூஸின் தந்தை தோமஸ்தான் பேட்மேனாக இருக்கிறார்.தோமஸின் மனைவிதான் ஜோக்கர்.
சூப்பர் மேன் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.மிகவும் மெலிந்து பலவீனமாக காட்சி தருகிறார்.
அஃக்வா மேனும் வொண்டர் வுமனும் தமது படை சகிதம் போர் புரிந்து கொண்டிருக்கின்றனர்.இவர்களால் பூமிக்கு பாரிய சேதம் வேறு.இவர்களுக்கெல்லாம் என்னவாயிற்று,இவையனைத்திற்கும் யார் காரணம்,சாதரண மனிதனாக இருக்கும் ஆலன் என்ன செய்யப்போகிறார்,உலகை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்தாரா என்னும் கேள்விகளுக்கு தொய்வின்றி பதில் கூறி இருக்கும் படம்தான் Flashpoint Paradox.

Spoiler Alert

இந்த படத்தை பார்த்தபின் சூப்பர்மேனை உங்களுக்கு பிடித்துப் போகலாம்."நட்புனா என்னன்னு" சூப்பர்மேன் கூட மிக அருமையாக சொல்கிறார்.படம் முழுவதுமே அனிமேஷன்தான் என்றாலும் கண்களை உறுத்தாமல் ரம்மியமாக எடுத்துள்ளனர்.Climaxல் ஒரு இடம் வரும்,அதில் தோமஸ் வேய்ன்,ப்ரூஸிற்கு ஒரு கடிதத்தை ஃப்ளாஷின் மூலம் கொடுத்தனுப்புவார்.எனக்கு பிடித்தமான காட்சிகளுள் அதுவும் ஒன்று.ஆக டைம் டிராவலிங்+சூப்பர் ஹீரோ படம் பிடித்தவர்கள் நிச்சயமாக இப்படத்தைப் பார்க்கலாம்.Rotten Tomatoes தளத்தில் இப்படம் 100% வாக்குகளை பெற்றுள்ளது.இந்த படம் அனைவருக்கும் பிடித்திருப்பதற்கு முக்கியமான காரணம் டைம் டிராவலிங்தான்.கேட்டவுடன் அனைவரையும் ஈர்க்கும் விடயங்களுள் ஒன்றுதானே காலப்பிரயாணம்.

A:P-கட்டுரைக் கூட தொடங்கிய இடத்தில்தான் முடிவடைந்துள்ளது.

4 comments:

  1. Terminator genesis கூட grand father paradox தானே?

    ReplyDelete
    Replies
    1. Genisys,எல்லாம் கலந்து அடித்திருப்பார்கள்.ஜோன் கொன்னர் என்பவன் பிறந்தால் எதிர்காலத்தில் இயந்திரங்களிடம் அடிமையாகிப் போகும் மக்களுக்கு உதவுவான்.ஆயினும் ஒரு கட்டத்தில் அவன் மனிதர்களுக்கு எதிரானவனாக மாற்றப்பட்டுவிடுவான்.இது ஒரு கதை.
      Skynet systemனது அமுல்படுத்தப்பட்டு விட்டால் எதிர்காலத்தில் மனிதர்கள் இயந்திரங்களுக்கு அடிமையாகி விடுவார்கள்.இது கதை இரண்டு.
      ஆக Skynet system அமுல்படுத்தப்படுவதை எவ்வாறேனும் தடுத்து விட வேண்டும்(அதன்பின் ஜோன் கொன்னர் பிறந்தாலும் பிறக்காவிட்டாலும் இழப்பேதும் இல்லை).ஆனால் எதிர்காலத்தில் இயந்திரங்களுக்கு சார்பாக மாற்றப்பட்டுவிட்ட ஜோன் இறந்தகாலத்தில் Skynetஐ பாதுகாப்பதற்காக அனுப்பப்படுகிறான்.Skynet System அழிக்கப்பட்டால் எல்லாம் சுபமே.ஆனால் அது அமுல்படுத்தப்பட்டால் மனிதர்களுக்கு ஆபத்துதான்.

      Delete

//]]>