Related posts

Breaking News

Mad Max:Fury Road(2015 - 3D)

"நீர் இன்றி அமையாது உலகு" என்றார் வள்ளுவர்...ஒருவேளை,அவ்வாறு அமைந்தால்...

கதைக்களம் நிச்சயமாக எதிர்காலத்தில்தான் நடக்கிறது.பாரிய அழிவு ஏற்பட்ட காரணத்தால் உலகமே வறண்டு போய் விடுகிறது...'இல்லை' என்று கூறும் அளவுக்குத் தண்ணீருக்குத் தட்டுப்பாடு...கண்ணுக்கெட்டிய தூரம் வரை மணல்...மணல்...வெறும் மணல் மாத்திரமே.ஆங்கங்கே சில மனிதர்களும் வாழ்கின்றனர்.பஞ்சமும் பினியுமே உருவான ஒரு கூட்டம்.இக்கூட்டத்திற்கு ஒரு தலைவன்,அத்தலைவனுக்கு பல அடிமைகள்.தலைவனோ மிகக்கொடூரமானவன்.அப்பாழ் நில மக்களுக்கு அவ்வப்போது தண்ணீரை திறந்து விடுவதால் அவர்களுக்கு அவன்தான் கடவுள்...கொடுங்கோலனுக்கோ குறையற்ற பல மனைவிகள் உள்ளனர்.அம் மனைவிகளைக் கொண்டு தன் வாரிசுகளை முழுமையாகப் பெற்றெடுப்பதுதான் இவனது நோக்கம்.அத் தலைவனின் படை தளபதி எரிபொருட்களை பெற்று வருவதற்காக அண்டை தேசத்துக்கு அனுப்பப்படுகிறாள்.ஆனால் அவளோ பெண்ணியம் பேசுபவள்.இதைப் போன்ற ஒரு சந்தர்பத்திற்காகக் காத்திருந்த அவள்,தன் தலைவனின் மனைவிகளைக் கடத்தி விடுகிறாள்.இவர்களோடு அடிமை வீரர்களிடம் சிக்கிக் கொண்ட மேக்ஸ் என்பவனும் அடிமை படை வீரன் ஒருவனும் இணைந்து கொள்கின்றனர்.இவர்களைக் கொடுங்கோலனின் படைகள் விரட்டுவதே முழுக்கதையுமாகும்.



தலைப்பிலேயே Master mind Geroge Millerன் இயக்கத்தில் எனப் போட்டு விடுகிறார்கள்."அப்படி என்னதான் இவர் செய்து விடப்போகிறார் " என்றே இருந்தேன்.பின்னர்தான் கண்டுக்கொண்டேன்.இந்த எழுபது வயசுக்காரர் உண்மைக்குமே Mr.Mastermindதான்.முதல் நொடியிலேயே கதை தொடங்கி விடுகின்றது.குறிப்பிட்ட சில இடங்களில் கதை மெதுவாக நகர்கிறது.அது தேவையாகவும் இருக்கிறது.படத்தில்  (நான் எதிர்பார்த்த) ஓர் திருப்பமும் உள்ளது.
படத்தில் Graphics காட்சிகள் உலகத்தரம்.பாரிய வாகனங்கள் முதல் முட்களாலான அச்சிறிய வாகனம் வரை அனைத்தும் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளன.


இசையைப் பற்றிச்சொல்லியே ஆக வேண்டும்.படம் முழுவதுமே இசைச் சூழ்ந்த ஒரு தீவே.அதுவும் Electric Guitar தெறிக்கும் இடங்களில் simply awesome(கிட்டார் வாசிப்பதற்கென்றே ஒரு கதாபாத்திரம் படைக்கப்பட்டுள்ளது என்பது தனிச் சிறப்பு)...திரைப்படம் வேற levelலில் உள்ளது.கதாபாத்திரங்களைப் பொருத்த மட்டில்,நக்ஸ் படை வீரன் பெரிதும் மனதை கவர்கிறான்.மற்ற பாத்திரங்களும் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன.




படம் முப்பரிமானத்தில் கண்களைக் கொள்ளை கொள்கிறது.குறைகளைக் கண்டறிய முன் படம் முடிந்தே விட்டது.ஒருவேளை நீரின்றி உலகு அமைந்தால்...நினைக்கவே பயமாக இருக்கிறது..!


நண்பர்கள் அனைவருக்கும் Happy Christmas...On this joyous day, and throughout the new year, may your life be filled with an abundance of love..!

No comments

//]]>