Related posts

Breaking News

தூங்காவனம்

நயன்தாரவின் படத்திற்குதான் (நானும் ரெளடி தான்) போகவேண்டும் என்ற முடிவோடுதான் திரையரங்கிற்குச் சென்றேன்...என்றாலும் திரிஷாவின் வருகையால் நயனை தூக்கி விட்டார்கள்...நமக்கு நயன்தாரா இல்லைனா திரிஷா என மனதை தேத்திக் கொண்டே டிக்கெட்டுகளை வாங்கினேன்...Sleepless Nightன் தழுவல் என்பதை உலக நாயகனே வெளிப்படையாகக் திரையில் கூறிவிட்டார்(இப்போதாவது பெரிய மனது வந்ததே)..!

பெரும் மதிப்புள்ள போதைப் பொருட்களைக் கொள்ளையிட்டு விட்டார் திருடனான போலீஸ் கமல்.அதே போதைப் பொருட்களுக்காகக் கமலின் மகனை கடத்துகிறது பிரகாஷ்ராஜின் குழு.திருட்டு போலீஸான "அப்பா" கமல் தன் மகனை காப்பாற்ற என்னவெல்லாம் செய்தார் என்பதே மீதிக்கதை...ஆஹான்...அதுதான் முழுக்கதையும் கூட.


திவாகரான கிஷோர் அலட்டல் இல்லாமல் அதே நேரம் அவரின் மற்றைய படங்களோடு ஒப்பிடும் போது மாறுபட்ட ஒரு நடிப்பினையும் வழங்கியுள்ளார்.வில்லனையே போட்டுத் தள்ளும் வில்லனாக அதிர வைக்கிறார்(செம).திரிஷா சண்டைக் காட்சிகளில் கூடச் சளைக்காமல் உழைத்துள்ளார்.நடிப்பிலும் நாயகனுக்கு நேர் வந்துவிட்டார்.பிரகாஷ் ராஜிற்கு பல நாட்களுக்குப் பின்னர் பாரமானதொரு வேடம்.திரைக்கதை கமல்ஹாசன்.இயக்கம் ராஜேஷ் மா செல்வா எனப்போடுகிறார்கள்.ராஜ் கமலிற்காகப் பல படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர்தான் இவர்.இப்படத்திலும் அவர் உதவி இயக்குனர் தானோ என எண்ணத் தோன்றுகிறது.கமல் நடிப்பை பற்றிச் சொல்ல ஒரு பந்தி பத்தாது...ஆகவே அதை விட்டுவிடுவோம்.கமலின் மாமூலான முத்(த)திரைக்காட்சிகளுக்கும் பஞ்சமில்லை.எஸ்தரும் நம்மைக் கவரத் தவறவில்லை.

சிறுவனாக நடித்த பையனுக்கு வழங்கப்பட்ட வசனங்களில் பாதிக்கு மேற்பட்டவை இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்களே...கொஞ்சமேனும் அவற்றினை மெருகேற்றி இருக்கலாம்.படம் உலகத்தரம் வாயந்தது.எனினும் சில தருக்க ஓட்டைகள் கண்ணில் தென்பட்டன.தெறிக்க விடும் துப்பாக்கிகளில் லொஜிக் மீறல்களை ப் பற்றி ஆராய வேண்டிய அவசியமில்லை.ஆனால் உலகநாயகனின் திரைக்கதையில் விரிசல்கள் எழுவது குறிப்பிடப்பட வேண்டியதொன்றே.காயம்பட்ட தன் வயிற்றை கமல் மாறி பிடித்துக் கொண்டு இருப்பது,திரிஷா பை இருக்குமிடம் தெரிந்தும் அதைப் பாதுகாப்பதில் ஆர்வம் கொள்ளாதது,அவ்வளவு அசம்பாவீதங்கள் துப்பாக்கிச் சூடுகள் நடந்தும் போலிஸ் சம்பவ இடத்திற்கு வராமை என்பனவற்றைக் குறிப்பிடலாம்.வழக்கம்போல் கிளைமேக்ஸில் போலீஸ் வருவது ஒரு அதரமொக்கையான டெம்பேளேட் காட்சிதான் இருந்தாலும் அதன் தாக்கம் திரையில் பெரிதளவில் தெரிவதில்லை.திரைப்படத்தைப் பற்றி இன்னும் சொன்னால் தூங்காவனம் ஒரு தடவை பார்க்கலாம்பி.கு:- (1)பக்கத்து தியேட்டர்களிலெல்லாம் தெறிக்க விட்டிருந்த போதிலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கமலை நாடியே வந்திருந்தனர்.அதிலும்  பெரும்பான்மையானோர் குடும்பம் சகிதம் வந்திருந்தனர்...கமல் மீது அவர்கள் வைத்த நம்பிக்கையை அவர் காப்பற்றி விட்டார்..!

பி.கு:-(2)உங்கள் இல்லந்தோறும் சந்தோஷ மழைப் பொழியட்டும்...இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பர்களே..!


No comments

//]]>