Related posts

Breaking News

வெளியானது சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் #SK14

வெளியானது சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் #SK14 



இன்று நேற்று நாளை என்ற சூப்பர் ஹிட், சயன்ஸ் ஃபிக்‌ஷன் படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், சிவகார்த்திகேயன் நடிக்கும் 14வது திரைப்படத்தின்  தலைப்பை இன்று ஏ.ஆர்.ரஹ்மான் டிவிட்டரில் வெளியிட்டார். பல நிதிப் பிரச்சினைகளால், இந்த படத்தின் படப்பிடிப்பு இடை நிறுத்தப்பட்டிருந்தது. எனினும், இப்போது சில தினங்களுக்கு முன்னர் இந்த திரைப்படத்தின் வேலைகள் மீண்டும் துவங்கின.

“அயலான்” என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படம் கண்டிப்பாக ஒரு ஏலியன் கதைக்கருவை கொண்ட திரைப்படம் என்பது, டைட்டிலிலேயே விளங்கியிருக்கும். ஏலியன் கதைகளில் இரண்டு விதமான கதைகள் பொதுவாக இருக்கும். ஒன்று: வேற்றுக் கிரகத்தில் இருந்து பூமிக்கு வரும் ஏலியனின் கதை, மற்றையது: பூமியில் இருக்கும் மனிதர்கள் வேறு கிரகத்திற்கு சென்று அங்கே சந்திக்கும் ஏலியன்களை மையமாகக் கொண்ட கதை. இப்படத்தின் டைட்டிலின் கீழே, டெஸ்டினேஷன் எர்த் (Destination Earth) என்று டேக்லைனும் உள்ளதால், இது பூமிக்கு வரும் ஏலியனை மையமாகக் கொண்ட கதையாக இருக்கும் என ஊகிக்கலாம்.

பல வித்தியாசமான முயற்சிகளை சிவகார்த்திகேயன் எடுத்து வருகிறார். அவரது இந்த புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். தமிழ் சினிமாவில், சிவகார்த்திகேயனுக்கு இது எட்டாவது வருடம். அவரது இந்த பாதையில் அவர் சந்தித்த சவால்களையும் செய்த சாதனைகளையும் பற்றிய சிறப்புக் கட்டுரையை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

No comments

//]]>