Related posts

Breaking News

Daredevil:TV Series



சூப்பர் ஹீரோக்களின் சிற்பியான ஸ்டான் லீயினால் படைக்கப்பட்ட இன்னுமொரு கதாபாத்திரம்தான் டேர்டெவில்.மார்வல் உலகின் வித்தியாசமான சூப்பர் ஹீரோக்களில் ஒருவர்.இவரை மையமாகக்கொண்ட தொலைக்காட்சி தொடரொன்றை Netflix நிறுவனத்தினர் கடந்த ஆண்டில் வெளியிட்டிருந்தனர்.மார்வல் ரசிகர்களை மட்டுமல்லாது பலரையும் கட்டிப்போட்ட இந்த தொடரானது பல முன்னனி தளங்களில்,BBCயின் ஷெர்லாக் ஹோம்ஸ்,ப்ளாஷ் மற்றும் HBOவின் மிகப்பிரபல்யமான கேம் ஒஃப் த்ரோன்ஸ் போன்ற சீரிஸ்களை விட அதிகமான ரேட்டிங்குளை பெற்றுள்ளது.


விக்ரம் நடித்த 'தாண்டவம்' திரைப்படத்தை பார்த்துள்ளீர்களா!?அதில் ஒரு விபத்தில் கண்பார்வையை இழக்கும் விக்ரம் தனது கேட்கும் ஆற்றல் மற்றும் சண்டையிடும் திறன் ஆகியவற்றின் துணைக்கொண்டு தனக்கு துரோகம் இழைத்தவர்களை பழிவாங்குவார் அல்லவா.கிட்டதட்ட அதே கதைதான் டேர்டெவிலினுடையதும்.

தந்தையின் அரவணைப்புடன் வாழ்ந்து வரும் சிறுவன் மேட் ஒரு இரசாயன வெடிவிபத்தில் தனது கண்பார்வையை இழக்கிறான்.இரசாயன தாக்கங்களின் பக்கவிளைவால் அவனது உடலினுள் பல மாற்றங்கள் நிகழ்கின்றன.அவனது கேட்கும் மற்றும் உணரும் திறன் ஆகியவை சாதரண மனிதர்களினுடையதை காட்டிலும் பன்மடங்கு அதிகமாக இருப்பதை அவன் உணர்கிறான்.அதேநேரம் தேர்ந்த குத்துப்பயிற்சி வீரரான மேட்டின் தந்தை எதிரிகளது சூழ்ச்சியால் கொல்லப்பட இப்பரந்த உலகில் தனித்து விடப்படுகிறான் சிறுவன் மேட்.தனது விடா முயற்சியினால் சட்டம் கற்றுக்கொள்ளும் இவன் பகலில் சட்டத்தரணியாகவும் இரவுகளில் நீதிக்காவலனாக வலம் வருகிறான்.மேட்டினுடைய நண்பனின் பெயர் ஹெல்டன்.இவர்கள் இருவருமே கோர்டுக்கே செல்லாத சட்டத்தரணிகள்.ஹெல்டின் போலீஸ் நண்பர் ஒருவரின் மூலமாக இவர்களுக்கு ஒரு வழக்கு கிடைக்கிறது.கொலை வழக்கான இதில் பெய்ஜ் எனப்படும் பெண் தன் சக ஊழியரைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறாள்.சிறையில் அவளை சந்திக்கும் மேட்,அவளது இதயத்துடிப்பின் மூலமாக அவள் குற்றமற்றவள் என்பதை அறிந்து கொள்கிறார்.அந்த வழக்கையும் பொறுப்பேற்கிறார்.அதன் பின் மேட் மற்றும் அவரைச்சார்ந்தவர்கள் சந்திக்கும் பிரச்சினையே டேர்டெவில் சீரிஸின் கதைக்கரு.

கிட்டதட்ட பேட்மேன் பாணியில்தான் டேர்டெவிலின் கதைகள் உள்ளன.(Daredevil-மேட்டின் தந்தையினுடைய Boxing Ring Name).2003ல் இதே பெயரில் ஒரு திரைப்படமும் Fox நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டது.இந்த படம் மோசமான தோல்வியை சந்தித்த காரணத்தினால் Fox நிறுவனத்தார் தொடர்ந்து டேர்டெவில் படங்களை வெளியிடும் எண்ணத்தையே மறந்துவிட்டனர்.பேட்மேன் புகழ் பென்(BvS Batman fame Ben Affleck)நடித்த இந்த படம் மொக்கையாக இருந்தாலும் கூட இப்படத்தின் சிறப்பு ஒளித்தோற்றங்கள் அருமையாக கையாளப்பட்டிருக்கும்.
எது எவ்வாறெனினும் டேர்டெவில் சீரிஸானது மார்வலின் மிக முக்கியமான தொலைக்காட்சித்தொடர்களில் ஒன்று.அதனால்தான் மொத்தமாக 26 கதைகளை மட்டுமே கொண்ட இத்தொடரை ரிப்பீட் மோடில் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் டேர்டெவில் ரசிகர்கள்.

A:P:தமிழில் வெளிவந்த அல்லது தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட வெளிவந்த தொடர்களில் உங்களுக்கு பிடித்தமானவை எவை!?"மை டியர் பூதம்","ஜீபூம்பா","Honey I Shrunk The Kids" போன்றன சிறுவயதில் எனக்கு மிகவும் பிடித்தமான தொடர்கள்.இப்பொழுது தமிழில் சொல்லிக்கொள்ளும் படியாக ஒரு தொடர் கூட ஒளிபரப்பப்படுவதில்லை.(ஸீ தமிழில் ஒளிபரப்பப்படும் C.I.D கூட மொக்கையாகத்தான் உள்ளது).


No comments

//]]>