Related posts

Breaking News

Justice league:Then and Now(ஜஸ்டிஸ் லீக் அன்றும் இன்றும்)

ஒரு சூப்பர் ஹீரோ வந்தாலே பல வில்லன்களை போட்டு பந்தாடுவார் என்று குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.இப்போது பல சூப்பர் ஹீரோக்களை ஒன்றிணைத்தாயிற்று.அவர்களது சக்திக்கு நிகரான வில்லன்களை களமிறக்க வேண்டும்.அதற்காகவென்றே ஏற்கனவே இருந்த வில்லன்களை நன்றாக ஷைன் செய்தனர்.புதிதாகவும் பல வில்லன்களை உருவாக்கினர்.இவர்களுள் மிக முக்கியமானவர்களாக லெக்ஸ் லூதர்,டார்க் செயிட் போன்றோரே குறிப்பிடலாம்.


Lex Luthor


பேட்மேன் vs சூப்பர்மேன் பார்த்தவர்களுக்கு லூதரைப் பற்றி தெரிந்திருக்கலாம்(எனினும் படத்தில் லூதரின் பாத்திரம் பெரிதாக எடுபடவில்லை).லெக்ஸ் கோர்ப் நிறுவனத்தின் அதிபதி,பில்லியனர்,அருமையான விஞ்ஞானி,சூப்பர்மேனை அடியோடு வெறுப்பவன்,கொஞ்சம் பைத்தியக்காரனும் கூட.சூப்பர் மேனை அழிப்பதற்கென்றே பல நாசகார வேலைகளில் ஈடுபடுவதுதான் இவனது வேலை.தற்காப்பிற்காக கையில் கிரிப்டான் கிரகத்தின் இருந்து எடுக்கப்பட்ட கல்லை தன்னுடனேயே வைத்திருப்பான்.

Darkseid


ஜஸ்டிஸ் லீக்கின் மிக முக்கியமான வில்லன்.BvS படத்தில் ப்ரூஸ் வேய்ன் காணும் கனவை நினைவுபடுத்தி கொள்ளுங்கள்(அதில் X-Menல் வரும் அப்போகலிப்ஸ் போன்ற தோற்றம் கொண்ட ஒரு நபர் காட்டப்படுவார்.அவன்தான் டார்க் செய்ட்.



அபோகோலிப்ஸ் எனும் கிரகத்தை ஆழ்பவன்.இலகுவில் விளக்க முடியாத பல்வேறு சக்திகள் இவன் வசம் உள்ளது(IGNன் தளம் வெளியிட்ட Top 100 சூப்பர் வில்லன்கள் பட்டியலில் 6வது இடம் இவனுக்குதான்).அடுத்த வருடம் வெளியாகவிருக்கும் ஜஸ்டிஸ் லீக்:பாகம் 1ல் டார்க்செய்ட்தான் வில்லன் என கருத்துகணிப்புகள் கூறுகின்றன.மார்வலுக்கு ஒரு அப்போகலிப்ஸ் போல டீசிக்கு இந்த டார்க்செயிட்.



இவர்கள் மட்டுமல்லாமல் ஜோக்கர்,ஜெனரல் ஸாட்,Ultra Humanite என பல வில்லாதிவில்லன்களை DC கொண்டுள்ளது.இருபபினும் சீரான Continuity இல்லாத காரணத்தால் விற்பனைகளில் பெரும் தளம்பல்களை இவர்கள் சந்திதித்தார்கள்.அமெரிக்க காமிக்ஸ் உலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய டீசி ஸ்டான் லீயினது(மார்வல்) வருகைக்கு பின்னர் தனது அங்கீகாரத்தை இழந்தது.பேட்மேனை கூட அவர்கள் சரிவர பயன்படுத்தியிருக்கவில்லை.ப்ராங் மில்லரின் பேட்மேன் ரிட்டர்ன்ஸ்(1986) புத்தகம்தான் பேட்மேனை மீண்டும் உச்சத்துக்கு கொண்டுவந்தது.


DC Extended Universe




Marvelக்கு MCU(Marvel Cinematic Universe)போல DCக்கு இந்த DCEU.மேன் ஒஃப் ஸ்டீல் திரைப்படத்துடன்தான் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.அடுத்த ஆண்டில் இவர்கள் ஜஸ்டிஸ் லீக்கை திரையிட இருக்கிறார்கள்.இந்த படம் சொதப்புவதற்கான பல வாய்ப்புக்கள் உள்ளன.காரணம் 3D,C.Gயில் சண்டைகாட்சிகளை கண்டு ரசிகர்கள் அலுத்து போய்விட்டார்கள்.அதுமட்டுமல்லாமல் ஸேக் ஸ்னைடரின் மேன் ஒஃப் ஸ்டீல் மற்றும் பேட்மேன் VS சூப்பர்மேன் ஆகியவற்றின் திரைக்கதைகள் மகாமட்டம்.ஏற்கனவே மார்வல் சூப்பர் ஹீரோக்கள் குழுக்களாக சேரந்து சண்டையிடும் காட்சிகளை அனைத்து கோணங்களிலும் வைத்து படமாக்கி விட்டனர்.ஆக தொழில்நுட்பத்தை மட்டும் நம்பி ஜஸ்டிஸ் லீக் திரைப்படம் எடுக்கப்படுமேயானால் நிச்சயமாக தோல்வியைத் தழுவும்.மாறாக நோலனின் டார்க் நைட் போன்றோ அல்லது ஸாம் ரெய்மியின் ஸ்பைடர் மேன் 2 போலவோ அமைந்தால் சூப்பர் ஹீரோ ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.Justice League of America என ஆரம்பிக்கப்பட்ட இந்த குழு பல்வேறு மாற்றங்களை சந்தித்து இன்று Justice League என்ற பெயரில் வெள்ளித்திரையில் கால்பதிக்க காத்திருக்கிறார்கள்.




முற்றும்


2 comments:

  1. JL க்கு மிக அருமையான அறிமுகம்.

    இவர்கள் JL ஐ எப்படிக் கையாளப் போகிறார்கள் என்பது கேள்விக்குறி தான்.மார்வெல் படிப்படியாக தன் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்த முறை காமிக்ஸ் படிக்காதோரையும் ஈர்க்கும் வகையில் இருந்து அவேஞ்சர்ஸ்க்கு தேவையான மார்வெல் யுனிவர்ஸை மிக அருமையாக கட்டியெழுப்பியது.

    DC அணுகுமுறை தலைகீழாக உள்ளது.JL ஐ முதலில் அறிமுகப்படுத்தி பின்பு தனித்தனிப் படம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.முன்பு வந்த அனிமேசன்கள் பிரபலம் என்பதால் காப்பாற்றலாம்.

    விரைவில் suicide squad என்று அன்டி-ஹீரோ டீம் படம் வருகின்றது.இது எப்படியோ....

    MCU போல் இல்லாமல் DC பாத்திரங்களுக்கு காமிக்ஸில் வருவதையொத்த நடிகர்களை (உ+ம் அக்வா மேன்) தேர்வு செய்வதில்லை என்பதும் ஒரு குறை.ஏற்கனவே MCU அளவுக்கு FOX இன் F4,X-Men படங்கள்எடுபடாமைக்கும் இதுவொரு காரணம்.

    ReplyDelete
    Replies
    1. (1)Marvel கதாபாத்திரங்களை விட DCயின் கதாபாத்திரங்கள் மிகவும் உணர்ச்சிகரமானவை.இந்த நுணுக்கத்தை நோலன் மிக அருமையாக பயன்படுத்தியிருப்பார்.

      (2)Suicide Squad வித்தியாசமான அணுகுமுறையோடு எடுக்கப்பட்டிருக்கும் என நினைக்கிறேன்.காரணம் நான் Arkham Assault திரைப்படத்தைப் பார்த்து இருக்கிறேன்.டிரெய்லர்களில் பார்த்த வரையில் Arkham Assault(Animate movie) திரைப்படத்தைதான் live actionல் எடுத்திருப்பதுபோல் தெரிகிறது.அவ்வாறு இருக்கும் பட்சத்தில் Suicide squad பலத்த வரவேற்ப்பை பெற வாய்ப்புகள் அதிகம்.காரணம் Suicide Squad ஒரு சூப்பர் வில்லன்களுக்கான படம்.

      (3)X-Menல் மறக்க முடியாத பல கதாபாத்திரங்கள் அமைந்திருந்தன(deadpoolகூட X-Menல் ஒருவர்தான்).

      (4)மார்வலை முந்துவதற்காக சரியான திட்டமிடலின்றி திரைப்படங்களை எடுக்க தொடங்கிவிட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன்.எது எப்படியாயினும் திரைக்கதையில்தான் படங்களின் தரம் தங்கியுள்ளது.

      Delete

//]]>