Related posts

Breaking News

Martin Mystère(மர்ம மனிதன் மார்டின்)

சிறு வயது முதலே கார்டூன்கள் பார்ப்பது என்றால் எனக்கு அலாதியானதொரு விடயம்தான்.அதுவும் குறிப்பாக ஒரு சில கார்டூன்களுக்காக நாள் முழுவதும் காத்திருந்ததும் உண்டு.நம் அனைவருக்கும் காமிக்ஸ் வடிவில் நன்கு அறிமுகமானவர்தான் இந்த மர்ம மனிதன் மார்ட்டின்.ஆனால் பிரபல கனேடிய ஒளியலை வரிசை ஒன்றின் ஆஸ்தான நாயகனாக நம்மில் பலருக்கு இவரைத் தெரிந்திருக்காது.

Martin The Mystery


2003ம் ஆண்டு வாக்குகளில்(அப்போ எனக்கு only six yearsதான்)தொலைக்காட்சித் தொடராக வந்து பிரபலமடைந்தவர்தான் மர்ம மனிதன் மார்ட்டின்.காமிக்ஸுகளில் நாற்பது வயதுக்காரரான இவரை வியாபார தந்திரங்களின் பொருட்டு இந்த சீரீஸில் பதின்ம வயதுக்காரர் ஆக்கி விட்டார்கள்.அந்தி சாயும் பொழுதுகளில் Eye அலைவரிசையில் (தற்பொழுது நேத்ரா என பெயர் மாற்றப்பட்டுள்ளது) இத்தொடர் ஒளிபரப்பப்பட்டது. இவருடன் அரிய பழங்குடி உயிரினமான ஜாவா மற்றும் அவரது சொந்தக்கார பெண்ணும் தோழியுமான டயானவுடன் சேர்ந்து அமானுஷ்யம் மிக்க நிகழ்வுகளை நகைச்சுவையுடன் இவர் எதிர்கொள்வதே சீரீஸின் தீம்.அவ்வப்போது ஏலியன்களும் கறுப்பு நிற அங்கி(Men in Black)குழுவினரும் கூட கதைகளில் தலைக்காட்டுவார்கள்.மொத்தம் 69 பாகங்கள் வெளிவந்துள்ளன.அனைத்து பாகங்களும் கிட்டதட்ட 22 நிமிடங்களைக் கொண்டமைந்தன.பெரும்பாலன விமர்சன தளங்களில் நல்ல ரேட்டிங்கைப் பெற்ற தொடர் இது(IMBD 7.8/10).நேரம் கிடைக்கும் போது பார்வையிடலாம்.செம ஜாலியாக இருக்கும்(கொஞ்சம் குழந்தைத் தனமும் நம்மில் குடி கொண்டிருந்தால்).


கனவின் குழந்தைகள்

காமிக்ஸாக 1982ல் இருந்தே மார்ட்டின் வெளிவரத்துவங்கியிருந்தார்.இன்றுவரை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டும் விட்டார்.ஆனால் இந்த கதையில்தான் மார்ட்டினின் பிண்ணனி அதிகமாக அலசப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் நமக்கு காமெடி கதா நாயகர்களாக பரிச்சியமான MIBயினர் இக்கதையில் படு மோசமான வில்லன்களாக உலாவருகின்றனர்.சித்திரங்கள் அட்டகாசமாகத் தீட்டப்பட்டிருந்தாலும் சில இடங்களில் அருவருக்க வைப்பதும் ஏனோ.இரண்டு பாகங்களைக் கொண்டமைந்தது இக்கதை.முதல் பாகம் முழுவதுமே கதையை விளக்குவதிலும் மார்ட்டினினுடைய தந்தையின் பிண்ணனியை கூறுவதிலும் கவனத்தை செலுத்தியுள்ள கதாசிரியர்,இரண்டாம் பாகத்தில்தான் அதிரடி ஆக்ஷன்களை களமிறக்கியுள்ளார்.ஏலியன் கதைப்பிரியர்களுக்கு மிகவும் ஏற்றது.

A.P:- 1980களில் என்றவுடன் எனக்கு இன்னொரு விடயமும் ஞாபகம் வருகிறது.பாருங்களேன் என்னவென்று...

Advanced Pongal wishes friends..!♧♧♧

5 comments:

  1. நல்ல விமர்சனம். அமேசிங் ஸ்பைடர்மேன் 2ல் கூட ஸ்பைடர் மேன் பெற்றோர் விமான விபத்தில் கொல்லபடுவது போல வரும். ஆஸ்திரேலிய அபோர்ஜின் மக்களும் லெமூரிய தமிழர்களும் ஒன்று என நம்புபவன் நான். சிவ நடனம் என்ற ஒரு வகை நடனத்தை அவர்கள் இன்று ஆடுகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் இடுகைக்கும் நன்றி நண்பரே...அபோர்ஜின் மக்களை விட தமிழர்கள் ஒப்பிட முடியா மேன்மை பெற்றவர்கள் என்பது என் நம்பிக்கை.ஆனால் இன்றைய காலகட்டத்தில் நம் தனி அடையாளத்தை இழந்து வருகிறோம் என்பது என்னவோ உண்மைதான்..!

      Delete
  2. நானும் கூட இந்தகாட்டூனை இரசித்து பார்பேன் அதைமீண்டும்ஞாபகபடுத்தியதற்கு
    நன்றி

    ReplyDelete

  3. கனவின் குழந்தைகள் போனவருடம்
    வந்தபுத்தகங்களுள் சிறந்தது

    ReplyDelete
    Replies
    1. ஆம்...சென்ற வருடத்தின் மிகச் சிறந்த புத்தகங்களுள் ஒன்றுதான்..!

      Delete

//]]>