Related posts

Breaking News

பதிவளிக்க நேரமில்லை..!

வணக்கம் நண்பர்களே,
                               இப்பொழுதெல்லாம் முன்புபோல் பதிவிட நேரம் வாய்ப்பதில்லை.மேலதிக வகுப்புக்கள்,பரிட்சைகள் என்றே கடந்த ஓரிருமாதங்கள் பயணித்தன.மார்கழி மாத -குளிர்கால விடுமுறைகள் இவ்வாரம் அளிக்கப்பட்டன.சரி...சொந்தகதை,சோகக்தைகளை ஒதுக்கி வைத்து விட்டு வந்த விடயத்திற்கு செல்வோம்...
இன்று நாம் பார்க்கபோவது திகில் கதைகளின் நாயகன் டைலன் டாக்கின் வீதியெங்கும் உதிரத்தின் விமர்சனத்தினையே..!

வீதியெங்கும் உதிரம்              

வழமை போல் இம்முறையும் இதழ்கள் தாமதமாகவே கிடைக்கப்பெற்றன.ஆசிரியரின் ஹாட்லைனை கடந்து சென்றால் சிங்கத்தின் சிறுவயதில்(41) காண  கிடைக்கும்(இதனையே  தனி புத்தகமாக வெளி இடலாம் போல).
லண்டன்-அக்டோபர்-10ம் தேதி என ஆரம்பிக்கிறது கதை...முதல் பக்கத்திலேயே ஒரு பெண்ணுக்கு வாயில் புகை வருவதை பார்த்தவுடன் எனக்கு காதில் புகை வரத்தொடங்கி விட்டது.காரணம் இன்னொரு "அந்தி மண்டலமா!" என்ற நினைப்பே..!ஆனால் தொடரும் பக்கங்களில் வேறு Trackஇல் கதை பயணிப்பது புரிந்தவுடன்
கொஞ்சம் பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.ஸாரா ஸாரண்டன் என்னும் பெண்ணின் உதவியின் மூலம் ஜாக்-தி-ரிப்பர் என்பவனின் ஆவியுடன் தொடர்ப்புகொள்கிறது ஒரு குழு.அவர்களின் சந்திப்பு முடிந்தவுடன் ஸாரா கொல்லப்படுகிறாள்.அவ்வாறே அக்குழுவில் உள்ளோர்  தொடர்ந்து கொலை செய்யப்படுகின்றனர்.கொலை செய்தது ஜாக்-தி-ரிப்பரின் ஆவிதான் என்று பரவலாக பேச்சு அடிபடுகிறது.கொலைகாரன் யார் என்று கண்டுபிடிக்கும் பொறுப்பு 'ஸ்காட்லாந்து யார்ட்'டிடமும் அதில் இருந்து விலகி வந்த டைலன் டாக்கிடமும் வழங்கப்படுகிறது.பின்னர் நடப்பவையே   வீதியெங்கும் உதிரத்தின் மீதிக்கதை.ஒருசில பக்கங்களிலேயே டைலன் டாக்கை விட நாம் நன்றாக துப்பறிய தொடங்கிவிடுகிறோம்.பல இடங்களில் டைலன் டாக் அசடுவழிவது ஒரு பக்கம் எனில் இன்னொரு பக்கம் தன்துப்பாக்கியை தனது கோர்ட்டுக்குள் கைவிட்டு இன்னொருவர் எடுப்பதை கூட தடுக்க முடியவில்லை அவரால்..!

 1.                          Jack the Ripper
                                            Serial Killer
 With the Vigilance Committee in the East End: A Suspicious Character" from The Illustrated London News, 13Jack the Ripper is the best known name given to an unidentified serial killer active in the largely impoverished areas in and around the Whitechapel district of London in 1888.


கிளைமாக்ஸ் காட்சி மட்டும் இது டைலன் டாக்கின் கதை என்று கூறுகின்றன.ஜாக்-தி-ரிப்பரை பற்றி இன்னும் கூறி இருக்கலாம்..!ஓவியங்கள் பல இடங்களில் "பலே"வாகவும் சில இடங்களில் பல்லை இளித்துகொண்டும் இருப்பது ஏனோ(61ஆம் பக்கம்)!!!"ஆராசம்" போன்ற ஆக பழைய சொற்களை கொஞ்சம் தவிர்க்கலாம்.கடைசி பக்கத்திற்காகவும் க்ரௌச்சோ சொல்லும் மொக்கை ஜோக்குகளுக்காகவும் ஒருதடவை படிக்கலாம்..!

                                                                     

2 comments:

 1. கவிந்த்,,

  இதுதான் டைலன் டாக் கதை வரிசையில் வெளியான இரண்டாவது கதை.

  கதை அமைப்பிலும், கேரக்டர் உருவாக்கத்திலும் பல கட்டங்களில் பின்தங்கி இருப்பது இதனால் தான்.

  கதை வெளியானது இத்தாலியின் டைலன் டாக் வரிசையில் இரண்டாவதாக. 1986ல்.

  ReplyDelete
 2. Thanks for the information King_V sr..!

  ReplyDelete

//]]>