Related posts

Breaking News

The Flash(Tv Series-Season 01)எனது வலைத்தளத்தை என்றேனும் ஒருநாள் நன்றாக அலசிப்பாருங்கள்.மார்வல் காமிக்ஸை விட டீசி பற்றிதான் அதிகமாக எழுதியிருப்பேன்.பல நேரங்களில் மார்வலை புகழ்ந்தும் டீசியை கீழிறக்கியும் எனது கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கலாம்.குறிப்பாக டீசியின் சமீபத்தைய திரைப்படங்கள் என்னில் இருக்கும் சராசரி சினிமா ரசிகனை திருப்திபடுத்தியிருக்காது.ஆனால் மார்வலின் அத்தனை படங்களையும் விட நான் ஆவலுடன் எதிர்பார்த்து கண்டுகளித்தது Batman vs Supermanஐ தான்.சாதாரணமாக பார்த்தபோது அதனில் பல குறைகள் தென்பட்டன.எனினும் தெளிவாக செல்லும் கதை அதன் கதாபாத்திர வடிவமைப்பு என்பனதான் அதே படத்தை நான் மும்முறை சலிப்பின்றி பார்க்க காரணமாக இருந்தது.டீசியின் கதாபாத்திரங்கள் ஆழமானவை.IMAXல் அடித்து கொள்வது அவர்களது முதன்மையான தொழிலல்ல,டீசியின் சிறப்பம்சமே கதைசொல்லல்தான்.BVSல் கூட அதன் கதை,அது சொல்லப்பட்ட விதம் என்பதை ரசித்து பார்த்தேன்.ஆனால் அதற்கு திரைக்கதை எழுதி சரியான காரணா காரியங்களை முன்னளிப்பதில் அவர்கள் தோற்றுவிட்டனர்.டீசியின் நாயகர்கள் எப்படிப்பட்டவர்கள்,அவர்கள் உலகைக் காப்பதைக் காட்டிலும் தன்னையும் தன்னைச் சுற்றி உள்ளவர்களைப் பற்றியும் அக்கறை கொள்பவர்களாக இருப்பது ஏன்,அவர்கள் ஏனையவர்களுடன் சேர்ந்து வாழ எத்தகைய சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்னும் கேள்விகளையெல்லாம் கையில் எடுத்துக்கொண்டு அதனை அட்சர சுத்தமாக திரைக்கதையில் புகுத்தி எழுத்தப்பட்டிருக்கும்/எடுக்கப்பட்டிருக்கும் தொலைக்காட்சித் தொடர்தான் CW சேனலில் வெளியாகும் The Flash.

CW சேனலில் The flash 2013ம் ஆண்டிலிருந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது.இதுவரை மூன்று சீசன்களை எட்டியுள்ள இத்தொடரின் மூன்றாம் சீசன் வரும் செவ்வாய்கிழமையுடன் முடிவுக்கு வருகிறது.நான் முதல் சீசனை முழுவதும் பார்த்து முடித்துவிட்டேன்.முதல் சீசனைப் பற்றி சற்றி விரிவாகப் பார்ப்போம்.

பேரி ஆலன் (Barry Alan)என்னும் சிறுவனை உறங்கவைத்துவிட்டு அங்கிருந்து செல்கிறார் அவனது அம்மா.நன்றாக உறங்கிக்கொண்டிருக்கும் பேரி ஆலன் ஏதோவோர் அலறல் சத்தத்தைக் கேட்டு திடுக்கிட்டு எழுகிறான்.அவனை சுற்றி அமானுஷ்யமாக ஏதோவொன்று நிகழ்ந்து கொண்டிருப்பதை உணரும் அவன் வெளியே சென்று பார்க்கிறான்.அங்கே,தன் தாயைச் சுற்றி இரண்டு ஒளிவட்டங்கள் வேகமாக நகருவதைப் காண்கிறான்.அவன் தன்னையறியாமலேயே வீட்டுக்கு வெளிய எடுத்துச் செல்லப்படுவதை உணர்கிறான்.சற்று நேரத்திற்குபின்,அவனது அம்மா கொலை செய்யப்பட்டுள்ளதையும் அதற்காக அவனது தந்தை கைது செய்யப்பட்டு அழைத்துச்செல்லப்படுவதையும் பார்க்கிறான்.(இந்த காட்சியை நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்,இதே காட்சியை மீண்டும் மீண்டும் வெவ்வேறு கண்ணோட்டங்களில் வேறுபட்ட கோணங்களில் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள்).

ஆண்டுகள் உருண்டோடி விடுகின்றன.பேரி ஆலன் சென்ட்ரல் நகர காவல்துறையில் ஒரு தடவியல் நிபுணனாக பணியாற்றிக் கொண்டிருக்கிறான்.அவனது ஒரே லட்சியம் தன் தந்தையை நிரபராதி என நிரூபிப்பதே.அதே துறையில் டிடெக்டிவ் போலீஸாக(துப்பறியும் காவல் அதிகாரி என்னும் விழிப்பு பொருந்தவில்லை) பணியாற்றும் ஜோ வெஸ்ட் என்பவர்தான் பேரியின் வளர்ப்பு தந்தையாவார்.ஜோ வெஸ்டின் மகளான ஐரிஸும் பேரியும் நல்ல நண்பர்கள்.ஒரு நாள்,அதே நகரில் வாழும் ஹரிசன் வேல்ஸ் என்னும் விஞ்ஞானியின் விஞ்ஞான கூடமான S.T.A.R லேப்ஸில் துகள்கள் பற்றிய ஆராய்சியின் போது துகள் வேகவிரைவுபடுத்தும்(Particle Accelerator) கருவி வெடித்ததனால் அந்த நகரமே பெரும் சேதத்திற்கு உட்படுகிறது.இதன்போது ஏறபட்ட தாக்குதலினால் பாதிக்கப்படும் பேரி ஆலன் 9 மாதங்கள் சுயநினைவின்றி கோமாவில் கிடந்து  ஹரிசன் வேல்ஸின் கடும் முயற்சிக்கு பின்னர் சுய நினைவுக்கு திரும்புகிறான்.

சுயநினைவுப் வரப்பெற்ற ஆலன் உலகமே மிக மெதுவாக இயங்குவதை கவனிக்கிறான்.பின்னர்தான் அவனுக்கு தெரிய வருகிறது,உலகம் ஸதம்பிக்கவில்லை,அவன்தான் வேகமாக இயங்கும் ஆற்றல் பெற்றுள்ளான் என்பதை.இதேபோல் அந்நகரில் பலருக்கும் அந்த சம்பவத்தால் சூப்பர் பவர்கள் கிடைக்கப்பெறுகின்றன(இவ்வாறு அதீத சக்திகள் உள்ளவர்கள் Meta Human என அழைக்கப்படுகிறார்கள்).

S.T.A.R லேப்ஸின் ஹரிசன் வேல்ஸ் மற்றும் அங்கே பணிபுரியும் சிஸ்கோ ரமொன்,கேய்டிலின் ஸ்நோ ஆகியோரின் துணைக்கொண்டு தீய Meta Humansக்கு எதிராக Flash என்னும் பெயருடன் செயல்படுகிறான் பேரி ஆலன். அவனை எதிர்ப்பவர்கள் எப்படியானவர்கள்,உண்மையில் அன்றிரவு நடந்த சம்பவம்தான் என்ன,பேரி ஆலனை சுற்றியுள்ளவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை சலிப்பு தட்டமால் கூறியிருக்கிறது இத்தொடர்.இத்தொடரில் கதாபாத்திரங்கள் அனைத்தும் மிகவும் நுண்ணிய விபரிப்புகளுடன் எழுதப்பட்டுள்ளது.இதனால் கதாபாத்திரங்களுடன் ஒன்றுவது இலகுவாக இருந்தது.அதிலும் பேரி ஆலனின் கதாபாத்திரத்துடன் என்னால் இலகுவாக ஒன்ற முடிந்தது.ஜோ வெஸ்டின் பார்ட்னராக வரும் எட்டி(Eddie) முதற்கொண்டு சிறுசிறு கதாபாத்திர இடைவெளிகளை கொண்டவர்கள் வரை அத்தனை கதாபாத்திரங்களும் செதுக்கப்பட்டுள்ளது.அதிலும் Harrison Wellsன் கதாபாத்திரம் நின்றுபேசும்.
கதாபாத்திரங்கள் அத்தனையும் சென்ற நூற்றாண்டிலேயே எழுதப்பட்டுவிட்டதால் அதனை மேம்படுத்தும் வேலையை மட்டுமே குழுவினர் செய்துள்ளனர்,திருப்தியாக அதனை செய்துள்ளனர்.ஆக்ஷனை மட்டுமே நம்பாமல் அருமையான கதை அதில் வரும் கிளைக்கதை,Depth ஆன பாத்திர வடிவமைப்பு,உணர்வுகளுக்கு மதிப்பளித்து கதை பின்னல் என பல கோணங்களிலும் நிறைவானதாக இருந்தது சீசன் 1.

இத்தொடரில் தருக்க மீறல்களும் இல்லாமல் இல்லை.திறந்த வீட்டுக்குள் அது நுழைவது போல் எல்லோரும் S.T.A.R லேப்ஸுக்குள் நுழைக்கின்றனர்.இவ்வளவு பெரிய வெடிவிபத்து நடந்த பின்னரும் S.T.A.R லேப்ஸின் லைசன்ஸை அரசு தடை செய்யவில்லை.அதேபோல் டைம் கான்செப்டிலும் பல சந்தேகங்கள்(அதனை பின்னர் ஆராய்வோம்)

சிறுசிறு இடங்களில் தொய்வு இருந்தாலும் பெரும்பாலும் அத்தனை அத்தியாயங்களும்  வேகமாகவே செல்கின்றன.இது மாதிரியான சீரிஸ்களுக்கு தயாரிப்பு செலவு மிக அதிகம் காரணம் CG,VFX என்பனவே.ஹாலிவுட் திரைப்படங்களை எட்டித் தொடும் அளவிற்கு அருமையாக CG செய்துள்ளனர்.

ஸ்பாய்லர்கள் வரக்கூடும் என்பதால் Flash சீரிஸ் 1 பார்க்காதவர்கள்/ஸ்பாய்லர்களை படிக்க விருப்பமில்லாதவர்கள் கீழ் வரும் பந்தியை தவிர்ப்பது உத்தமம்.

முதல் சீசன் முடிவில் எனக்குள் சில கேள்விகள் எழுந்தன.யாரேனும் விளக்க முடியுமெனில் விளக்கவும்.இறுதி அத்தியாயத்தில் Eddie தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொள்வதன் மூலமாக தன் சந்ததியில் எதிர்காலத்தில் பிறக்கப்போகும் Eobard Thawne என்னும் Reverse-Flashயை அழித்துவிடுகிறான்.இதன் மூலம் Thawne பிறப்பது தடுக்கப்பட்டதாக சிஸ்கோ கூறுகிறான்.ஆக Reverse-Flash பிறக்கவேயில்லை.பிறக்காத ஒருவன் எப்படி இறந்தகாலத்திற்கு சென்று பேரி ஆலனின் தாயை கொல்லமுடியும்,அது மட்டுமில்லாமல் அவனால்தான் துகள் விரைவுபடுத்தும் கருவியும் வெடிக்கிறது,அதன் மூலம்தான் பேரி ஆலனுக்கு சக்திகளும் கிடைக்கப்பெறுகிறது.ஆகவே அவன் சதாரணமானவனாக மாறியிருக்க வேண்டுமே.இதை ஒத்த பல சந்தேகங்கள் உளளன.

ஆக சமீப காலத்தில் வந்த அருமையான சூப்பர் ஹீரோ சீரிஸ்தான் The Flash.Flash ரசிகர்கள் தவற விட்டுவிடாதீர்கள்.

4 comments

jscjohny said...

நேரமிருந்தால் விமர்சிக்க எண்ணியிருந்தேன். வேலை மிச்சம். ஹாஹா அதிலும் திறந்த வீட்டில் அது நுழைவது போல. உண்மைதான். ஸ்டார் லேப்ஸில் செக்யூரிட்டி செக்கிங்கெல்லாம் கடியாது போல.. கதை அருமையானது. கதையை தமிழில் கூறியுள்ள விதம் சுவையானது. வாழ்த்துக்கள்.

Kavind Jeeva said...

மிக்க நன்றி தோழரே..!

BALAJI SUNDAR said...

சூப்பர் பதிவு. சீஸன் 1 இன்னும் பார்த்து முடிக்காமல் தொங்கலில்தான் இருக்கிறது. ஸ்பாய்லரைப் பற்றிய கவலையின்றி பதிவை முழுக்க படித்துவிட்டேன். ப்ளாஷ் கதை ஏற்கெனவே 1990களில் தொடராக்கப்பட்டது. அதன் முதல் பாகத்தை ஒரு சினிமாவாக இங்கு திரையரங்குகளில் அல்லது வீடியோ கேஸட்டில் வெளியானது. எனக்கு வீடியோ கேஸட்டில் பார்த்த ஞாபகம். டைம் டிராவல் விஷயங்களில் பேக் டு தி ப்யூச்சர் பட தொடர்களை மீண்டும் மீண்டும் பார்த்தல், என்ஸைக்ளோபீடியாவை ரெபரன்ஸ் செய்வதற்கு சமமாக இருக்கும். நான் ப்ளாஷ் தொடரை நான் பார்த்தவரை ஊகித்துக் கொண்டது, டாக்டர் ஹாரி வெல்ஸின் சதியால்தான் ஸ்டார் லேப்ஸ் விபத்துக்குள்ளாகிறது. டைம் டிராவலில் யாரேனும் பின்னோக்கிச் சென்று சரித்திரத்தில் மாற்றம் செய்தால், அதன் விளைவு நிகழ்காலத்தையும் பாதிக்கும். டெர்மினேட்டர் அர்னால்டை கடந்த காலத்தினுள் அனுப்பி சாரா கானரை கொல்லும் திட்டத்தை ரோபோட்டுகள் முயற்சித்ததை ரெபரன்ஸ் செய்யவும். எதிர் காலத்தில் தன்னுடைய சந்ததியில் வரும் நபரை உருவாகாமல் தடுக்க தன்னையே அழித்துக் கொள்ளும் விஷயத்திற்காக LOOPER படத்தில் வரும் ஜோசப் கார்டன் லெவிட் (INCEPTION படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர்) ஒரு லூப்பில் இருக்கும் தன் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவர, தன்னையே கொன்று, தன்னுடைய எதிர்கால உருவமான ப்ரூஸ் வில்லிஸை அழிக்கும் முறையை ரெபரென்ஸாக சொல்லலாம். இப்போதைக்கு இவ்வளவுதான் என்னால் விளக்க முடிந்தது. மீதியை தனி பதிவாக போட்டு விடுகிறேன். ஹாட்ஸ் ஆஃப் டு தி போஸ்ட். வெல்கம் டு தி கிளப்.

Kavind Jeeva said...

நன்றி ப்ரோ...இதை இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போம்.Eobard Thawne என்னும் Reverse Flashன் முன்னோர் அவன் பிறக்கும் முன்பாகவே இறந்து விடுகிறார்.அப்படியெனில்
Reverse Flash என்னும் ஒருவன் எதிர்காலத்தில் பிறக்கவேயில்லை.ஆக பிறக்காத ஒருவன் காலப்பிரயாணம் செய்து பேரி ஆலனின் தாயை கொல்வது என்பது தருக்க நியாயங்களின் படி error ஆகும்.ஆக உண்மையான ஹரிசன் வேல்ஸ் இறந்து இருக்க மாட்டார்(அவரைக் கொன்றது Reverse Flash) என்பதால்.ஆகவே பேரி ஆலன் கதிரியக்க மின்னல்களால் தாக்கப்படுவதனால் ஹரிசன் உண்மையான ஹரிசன் வெல்ஸினால்தான் அது முடியும்.ஆனால் அவரும்(Earth 1 Harrison) உயிரோடு இருப்பதாக காட்டப்படவில்லை)

//]]>