Related posts

Breaking News

நாலு சாத்தான்களும் நம்ம டெக்ஸும்

ஹாய் ப்ரண்ட்ஸ்,
                                       2003ஆம்  ஆண்டு தீபாவளி மலராக நமது லயனில்  வெளி வந்த கதைதான் சூப்பர் கௌபாய் டெக்ஸ் வில்லர் அசத்தும் சாத்தன் வேட்டை."La paga di Giuda" என்னும் இத்தாலிய மூலத்தின்  தமிழ் மொழி பெயர்ப்பான இந்த கதையை எழுதியவர் 'கிளாடியோ(Claudio Nizzi)'இதற்கு உயிரோட்டமுள்ள ஓவியங்களை வரைந்துள்ளார் ஓவியர் ''ஜோ குபெர்ட்(Joe Kubert)'.
                                                                  JOE KUBERT

ஈதன் கால்டர் என்னும் தனது நண்பரை சந்திக்க சென்று கொண்டிருக்கிறார் டெக்ஸ்.ஆனால் கால்டரின் பண்ணையில் நடந்ததை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.ஜாங்கோ,ரஸ்,பிரான்க்,லூக் என்னும் நால்வர் கொண்ட கும்பல் கால்டரின் குடும்பத்தையும் அவரது பண்ணையையும் அடியோடு அழித்து விட்டு போய் விடுகின்றனர்.கால்டரின் பண்ணையை வந்தடையும் டெக்ஸ் நிகழ்ந்துள்ள அசம்பாவிதத்தை கண்டு மனம் கலங்குகிறார்.அந்த கும்பல் விட்டு சென்ற தடங்களை கொண்டு இச்சம்பவத்தின் காரண கர்த்தாக்கள் நால்வர் எனவும் அதில் ஒருவன் செவ்விந்தியன் எனவும் கண்டு கொள்கிறார்.அந்நால்வரையும் நரகத்திற்கு அனுப்புவதாக தன் நண்பனின் சமாதியில் வைத்து சபதம் எடுத்து கொள்ளும் டெக்ஸ் சாத்தான் வேட்டைக்கு கிளம்புகிறார்.குதிரையின் தடங்களை கொண்டு அவர்களை பின்தொடர்ந்து செல்கிறார் டெக்ஸ்.ஆனால் கயவர்களோ யாரோ தம்மை தொடர்ந்து வருவதை உணர்கிறார்கள்.ஒரு கணவாய் பகுதியில் மறைந்து நின்று நோட்டம் விடுகின்றனர்.இது தெரியாமல் அங்கு வரும் டெக்ஸ் அவர்களிடம் மாட்டி கொள்கிறார்.நான்கு பன்றிகளும் சிங்கத்தை அடித்து துவைகின்றன.அதில் ஒருவன் டெக்ஸ் ஒரு ரேஞ்சர் என்பதை அறிந்து கொள்கிறான்.ஒரு ரேஞ்சரை அப்பட்டமாக கொன்றால் தங்களுக்கு  ஆபத்து வரலாம் என்று எண்ணி டெக்ஸ்சையும் அவரது குதிரையையும் மலையில் இருந்து தள்ளி தற்செயலான விபத்து போல் ஜோடனை செய்து விடுகின்றனர்.

 மலையில் இருந்து குற்றுயிரும் குலையுயிருமாக  விழுந்த   டெக்ஸை  'ஹிராம் நோரிஸ்' என்னும் நல்லுள்ளம் கொண்ட ஒருவன் காப்பாற்றுகிறான்.பிக் கிரீக் என்னும் தனது கிராமத்திற்கு டெக்ஸை அழைத்து செல்கிறான்.
இப்பொழுது டெக்ஸ்சுக்கு எதிரிகளை பழி வாங்க காரணம் மட்டும் அல்ல உரிமையும் கிடைக்கிறது.ஹிராம் நோரிஸ் தனது கிராமத்தை பற்றி டெக்ஸிடம் விபரிக்கிறான்.ரே பாரட் என்பவன் தான் அவ்வூரிற்கு தாதா எனவும் ஷெரிப்பின் ஆதரவு அவனுக்கு இருப்பதால் அவனை யாராலும் அடக்க முடியவில்லை எனவும் கூறுகிறான். ரே பாரட்டின் சகோ(ஆங்கிலத்தில் 'ப்ரோ'னா  தமிழில் 'சகோ'தானே)தான் ப்ராங்க் பாரட்.டெக்ஸ் உயிருடன் இருப்பதை அறிந்து கொண்டு டெக்ஸை போட்டு தள்ள ரே இன்  உதவியை நாடுகிறான்.ஆனால் டெக்ஸ் வில்லரோ டெபுடி ஷெரீப்பின் உதவியுடன் ப்ராங்க் பாரட்டை கடத்தி மாரிஸன் என்பவனது பண்ணை வீட்டில் அடைத்து வைக்கிறார்.தம்பி வேணும்னா அண்ணன் தன்னை சந்திக்க வேண்டும் என்று 'ரே'க்கு தகவல் அனுப்புகிறார்.வில்லரும் ரேவும் ஒரு உடன்படிக்கைக்கு வருகிறார்கள்.தனது தம்பியை விடுவிக்குமாறும் அவனுக்கு  சட்டபடி தண்டனை வாங்கி தருவதாகவும் சொல்லும் ரே வில்லரை தன்னிடம் சரணடையுமாரும் சொல்கிறான் .டெக்ஸ் வில்லரும் வெளியே வருகிறார்.அவரை நோக்கி ரேயின் கும்பல் சரமாரியாக சுடுகிறது.ஆனால் டெக்ஸ் வில்லரின் உடையை அணிந்து கொண்டு வெளியே வந்தது தனது தம்பிதான் என்பதை பின்னர் தான் அறிந்து கொள்கிறான்.அதன் பிறகு சில 'டமால் டுமீல்'களுக்கு பின் ரேயின் கும்பல் டெக்ஸிடம் தோற்கிறது.

அடுத்து டெக்ஸ் தனக்கு கிடைத்த தகவலின் படி 'லூக் தோர்ப்' போன இடமானஃரிச் பீல்டு நோக்கி புறப்படுகிறார்.லூக் தனது காதலியை தேடியே அவ்வூரிற்கு வந்து இருந்தான்.ஆனால் அவனது காதலிக்கும் மார்ட்டின் என்பவனுக்கும் திருமணம் நிச்சயிக்கபட்டு இருப்பதாய் அறிந்து சினம் கொள்கிறான்.மார்டினை கொள்வதற்காக அவன் இருக்கும் சலூனுக்கு செல்கிறான்.அங்குதான் அவனது காதலியும் இருக்கிறாள்.அந்நேரம் பார்த்து டெக்ஸ் மற்றும் அந்நகர ஷெரிப் ஆகியோர் அச்சலூனுக்குள் நுழைய செய்வது அறியாது திகைக்கும் லூக் தனது காதலியை பிணை கைதியாக கொண்டு தன் சகாக்களுடன் தப்பி விடுகிறான்.ஒரு பாழடைந்த கோட்டையில் அவளை சிறை வைக்கிறான்.அவனை துரத்தி வரும் டெக்ஸ் ஒரு மெகா 'டிஷ்யும் டிஷ்யும்'கு பின் அவனை கொல்கிறார்.அடுத்து ரஸ் ஜெச்கின்சை பதம் பார்க்க எஸ்கலாண்டேஎன்னும் பாலைவன பகுதியின் ஊடே பயணிக்கும் டெக்ஸ் ஓர் நகரை வந்தடைகிறார்.அந்நகர ஷெரிப்பின் சகோதான் ரஸ் என்பதை கண்டுபிடிக்கிறார்.ஷெரிப் தனது ப்ரோவை எந்த ஹோட்டலில் மறைத்து வைத்து இருக்கிறான்?என்பதையும் அறிந்து கொள்கிறார்.ஹோட்டலில் நடக்கும் சண்டையில் ஷெரிப்பும் ரஸ்ஸும் கொல்லபடுகிறார்கள்.
மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியபின் இறுதி இலக்கான சிவப்பிந்தியனை தேடி புறப்படுகிறது புயல்.
அவன் இருக்கும் இடம் கனான் பீடபூமி பகுதி.போகும் வழியில் மூவர் கொண்ட குழு ஒன்று ஒரு அபாச்சே சிறுவனை துன்புறுத்துவதை காண்கிறார்.அச்சிறுவனை அவர்களிடம் இருந்து காப்பாற்றுகிறார்.அச்சிறுவன் வசிக்கும் குழுவில் தான் ஜாக்கோவும் இருக்கிறான்.அக்குழு தலைவரிடம் சென்று தான் வந்த காரணத்தையும் ஜாக்கோவை தன்னிடம் ஒப்படைக்குமாரும் டெக்ஸ் கூறுகிறார்.அதற்கு அவர் இருவருக்கும் ஒரு கத்தி சண்டையை ஏற்பாடு செய்வதாகவும் அதில் வெல்பவர் தம் நோக்கத்தை நிறைவேற்றிகொள்ளலாம் எனவும் கூறுகிறார்.இறுதியில் நமது இத்தாலியன் ப்ரூஸ் லீ ஜாக்கோவை வென்றார் என்பதை சொல்லவும் வேண்டுமா?
     
                                       

13 comments:

  1. முடிந்த அளவு கதையை சுருக்கி உள்ளேன்.இப்பதிவை நான் எழுதுவதற்கு உதவிய கிங் விஸ்வா,James Tex Western,மற்றும் எனது நெருங்கிய நண்பர் Google இற்கும் எனது நன்றிகள்.

    ReplyDelete
  2. Superb post.

    Kindly do post more and more often.

    All the very best.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஆதரவுக்கு நன்றி கிங் விஸ்வா அவர்களே!!!

      Delete
  3. தொடர்ந்து எழுதுங்கள் ...

    ReplyDelete
  4. டெக்ஸ் சித்திரம் சற்று மாறுபட்டிருந்தாலும். கதை ஜெட் வேகத்தில் செல்லும். அருமையான பதிவு.

    ReplyDelete
  5. அருமை! தொடருங்கள்!

    ReplyDelete
  6. டெக்ஸின் மாறுபட்ட பாணியிலான பழிவாங்கும் சித்திரக்கதையை மீணடுமொரு முறை நினைவுப்படுத்தி கொள்ள இயன்றது. தொடர்ந்து எழுதவும்

    ReplyDelete
  7. 10 வருடம் முன் காத்திருந்து வாங்கி டெக்ஸ் வில்லருடன்
    தீபாவளி கொண்டாடியதை உங்கள் பதிவு நினைவு படுத்தியது
    நன்றி நண்பரே !

    ReplyDelete
  8. தரமான விவரிப்பு

    ReplyDelete
  9. நன்றி நண்பரே

    ReplyDelete

//]]>