Related posts

Breaking News

“நான் பொய் சொல்லல”- ஹவுஸ்மேட்ஸிடம் ஆக்ரோஷப்பட்ட சனம்- Bigg Boss Tamil Day 30 Recap



Bigg Boss Season 4 தமிழ் ஆனது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதன் புதிய எபிசோடில் கொடுக்கப்பட்ட டாஸ்கில் Bigg Boss வீடு நீதிமன்றாக மாற்றப்பட்டு, போட்டியாளர்கள் தங்களுக்கு யாருடன் பிரச்சினை உள்ளதோ, அவருக்கு எதிராக புகார் அளிக்கலாம் என கூறப்பட்டது. இந்த நீதிமன்றுக்கு நடுவராக புதியதாக வந்த போட்டியாளர் சுஜித்ரா நியமிக்கப்பட்டார். இது அன்றைய Bigg Boss நாளுக்கான பிரதானமான டாஸ்க்காக இருப்பினும் அன்றைய நாளில் வேறு சில விடயங்களும் நடந்தன. விரிவாகப் பார்க்கலாம். 

காலையில், ஷிவானிக்கு கொடுக்கப்பட்ட மார்னிங் டாஸ்கில் நவரசங்களையும் எப்படி செய்வது என்பதை ஏனைய ஹவுஸ் மேட்ஸுக்கு கற்றுக் கொடுக்கும்படி கூறப்பட்டிருந்தது. இதில் ஷிவானி பெரிதாக எதையும் செய்யாவிட்டாலும் கூட, அவர் அழைத்த ஆரி அழுகையையும், சுரேஷ் அவர்கள் ஏனைய ஒரு சில முக பாவனைகளையும் திறம்பட காட்டிவிட்டு சென்றனர். 

பின்னர் தொடங்கிய நீதிமன்ற டாஸ்கில் முதலில் சனம் மற்றும் பாலாஜிக்கு இடையிலான வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் பாலாஜி தான் விளையாட்டாக செய்ததை எல்லாம் சனம் சீரியஸாக எடுத்துக் கொள்ளும் அதே வேளை அவர் விளையாட்டாக தனக்கு செய்பவற்றை தான் சாதரணமாக எடுத்துக் கொள்வதான வாதத்தை முன் வைக்க அதற்கு சனம், பாலஜி எல்லாவற்றுக்கும் அதிகமாக கோபப்படுவதாக கூறினார். பாலாஜிக்கு ஆதரவாக சில ஹவுஸ்மேட்ஸும் சனத்திற்கு ஆதரவாக சில ஹவுஸ்மேட்ஸும் குரல் கொடுத்தனர். 

இறுதியில் பாலாஜி பக்கம் நியாயம் உள்ளதாக நடுவர் சுஜித்ரா தீரப்பு வழங்கினார். அடுத்த வழக்கில் சனத்திற்கு எதிராக சுரேஷ் கொடுத்த புகார் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில், சனம் அவர்கள் வேண்டுமென்ற எல்லா பிரச்சினைகளுக்குள்ளும் புகுந்து தனது கருத்தை கூற தெரிவிப்பாதாக கூறினார். தான் அவ்வாறு இல்லை என சனம் பதிலுக்கு கூறினார்.

இதில் ஆச்சரியமாக சனத்திற்கு ஆதரவாக பாலாஜி சுரேஷை எதிர்த்து நின்றார். மறுபுறம் ரியோ தலைமையிலான குழு சுரேஷுக்கு ஆதரவாக இருந்தது. இதன் போது சுரேஷுக்கு ஆதரவாக பேசிய அர்ச்சனா, சமையலறை சம்மந்தமாக நடந்த விவாதத்திற்கு கூட சம்மந்தமே இல்லாமல் சனம் வந்ததாகவும் தான் “இதில் தலையிட வேண்டாம்” என்று கூறிய பின்னரே அவர் சென்றதாகவும் கூறினார். 

இதை மறுத்த சனம் அர்ச்சனா பொய் சொல்வதாக கூறினார். இறுதியில், சனத்திற்கு ஆதரவாக சுஜித்ரா தீர்ப்பு வழங்கினார். அவர் வெல்வதற்கு பாலாஜியின் வாதம் முக்கிய காரணமாக அமைந்தது. பின்னர், நீதிமன்ற டாஸ்க் இடை நிறுத்தப்பட்டது. அதன் பின், பாலாஜிக்கு ஆதரவாக பேசியவர்களை, பாலாஜி எதிர்த்து நின்றதற்காக அவரை மற்றவர்கள் கடுமையாக விமர்சித்தனர். 

அத்தோடு, அர்ச்சனாவை பார்த்து சனம் பொய் சொல்வதாக கூறியது ஏன்? என்ற பிரச்சனையை பற்றி எல்லோரும் கதைத்துக் கொண்டிருந்தனர். அப்போது சனம், தான் அந்த இடத்தில் இடையூறு விளைவிக்காமல் அர்ச்சனா சொன்னவுடன் தான் போய் விட்டதாகவும் பின்னர் ஏன் அந்த வாதத்தை நீதிமன்றில் வைக்க வேண்டும் என வினவ, எல்லோரும் ஒரே நேரத்தில் ஒவ்வொரு பதிலை கூற நிலைமை சிக்கலாகி சண்டையாகி போனது.

சனம், தான் பொய் சொல்லவில்லை என்று கதறி அழுதபடியே செல்ல, ஏனைய ஹவுஸ்மேட்ஸ் அவரை சமாதானம் செய்ய முயன்றனர். இந்த இடத்தில் சுரேஷ் அவர்கள் வேறி ஒரு பிரச்சினையை கொண்டு வர முயன்ற போது, சுஜித்ரா அவரை off செய்தார். இவ்வாறாக அன்றைய நாளுக்கான Bigg Boss முடிவடைந்தது. 


சனம் செய்தது சரியா? பாலாஜி தனது கேமை விளையாடுகிறேன் என்ற பெயரில் சுயநலமாக செயற்பட்டாரா? உங்கள் கருத்து என்ன? கீழே கமண்ட் செய்யுங்கள். 

No comments

//]]>