Related posts

Breaking News

பாலாஜி-சனம் மோதல்- நீதிமன்றமான பிக்பாஸ் Bigg Boss Season 4- November 3 -Promo 1


பிக்பாஸ் சீசன் 4 பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இன்றைய டாஸ்கில் பிக்பாஸ் வீடானது நீதிமன்றமாக மாறுகிறது. சுஜித்ரா நீதிபதியாக செயற்பட ஏனையவர்கள் தங்கள் பிரச்சினைகளை மனுக்களாக எழுதி ஒரு பெட்டியுல் போட வேண்டும். அதை வழக்குகளாக எடுத்துக் கொண்டு நீதிபதியான சுஜித்ரா தீர்ப்பு வழங்குவது போல இப்போது வெளியான promo அமைந்துள்ளது. 

இதில் பாலாஜி சனத்திற்கு எதிராகவும், சனம் பாலாஜிக்கு எதிராகவும் மனுக்களை எழுதவதாக காட்டப்பட்டுள்ளது. போலவே சம்யுக்தா ஆரிக்கு எதிராகவும் சுரேஷ் சனத்திற்கு எதிராகவும் புகார் அளிப்பதாகவும் தெரிகிறது.

பாலாஜியை சனம் எட்டி உதைத்தாக புகார் கூற, தான் விளையாட்டாக உதைத்தாக சனம் அதை செய்து காட்ட, வாக்குவதங்கள் பெரிதாவது போன்று காட்டப்பட்டுள்ளது. அடுத்த Promoவில் ஆரி மற்றும் சம்யுக்தாவுக்கு இடையிலான வழக்கு விசாரிக்கப்படலாம். 

No comments

//]]>