Related posts

Breaking News

“எட்டி உதை” பாலாஜியிடம் சீறிய சனம்- Bigg Boss Day 29 Full Recap

 


தமிழில் நடைபெற்று வரும் Bigg Boss சீசன் 4 ஆனது என்றும் இல்லாத அளவுக்கு இப்போது போட்டி நிறைந்த ஒரு களமாக மாறிக்கொண்டிருக்கிறது. Bigg Boss சீசன் 4 Day 29ல் என்ன நடந்தது என்பதை விரிவாகப் பார்க்கலாம்.


சுஜி வீட்டிற்குள் வந்தவுடன் எல்லோருக்கும் சில முகங்களை கொடுத்தார். அதில் ரியோவுக்கு, யாரையோ தேடுவது போன்ற முகத்தினை கொடுத்திருந்தார். ரியோ புதிதாக உள்ளே நுழைந்த சுஜியிடம், சுஜி கொடுத்த முகத்திற்கான காரணத்தை கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு சுஜி, ரியோ என்ன நிலைப்பாட்டில் உள்ளார் எதை இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறார் என மக்களுக்கு புரியவில்லை என விளக்கம் கூறினார். 

பின்னர், பாலஜி மற்றும் சனம் ஆகியோர், தாங்கள் இருவரும் இனிமேல் பேசிக்கொள்ளக்கூடாது என்பதைப் பற்றி நெடுநேரமாக பேசிக்கொண்டிருந்தனர். உரையாடல் முடிவில் பாலாஜி “get lost” என்று கூற சனம் அவரை விளையாட்டாக உதைத்து விட்டு சென்றார். 


அதன் பின் இரவு, சுரேஷ், பாலாஜி மற்றும் சுஜித்ரா ஆகியோர் கலந்துரையாடும் போது, “Musical Chair” டாஸ்கில், சம்யுக்தாவிடம் சொல்லிதான் பாலாஜி, சுரேஷை வெற்றி பெற வைத்ததாக கூறி விட, கடுப்பான சுரேஷ், “Musical Chair”ல் எப்படி ஒருவரை வெற்றி பெற வைக்க முடியும்? அது மட்டுமல்லாமல் அதை ஏன் புதிதாக வந்த பெண்ணிடம் சொல்ல வேண்டும் என கவலையுடன் அதை ஏனையவர்களுடன் விவாதித்துக் கொண்டிருந்தார். அத்தோடு, பாலாஜி சனத்துடனும் ஷிவானியுடனும் திரையில் தோன்றுவது பார்ப்பதற்கு நன்றாக உள்ளது எனவும் சுஜி கூறினார். காலையில், ஆஜித் ஏனையவர்களுக்கு பாட சொல்லிக் கொடுக்கும் டாஸ்கில், அவர் கூறுவதை மற்றவர்கள் கேட்காமால் அவரவர் பாட்டுக்கு கதைத்துக் கொண்டிருக்க கடுப்பான ஆஜித் , சனத்தை திட்டிவிட சற்று சலசலப்பு ஏற்பட்டது. இதற்கு முன்தான் பாலாஜி சனத்தை “தருதலை” என வர்ணித்துக் கொண்டிருந்துருப்பார். 

பின்னர், உள்ளே சென்ற சனம் எதையோ யோசித்துவிட்டு வந்தது போல, தன்னை தருதலை என்று ஏன் கூறியதாக பாலாஜியிடம் வாக்குவாதம் செய்ய, ஒரு கட்டத்தில் இது பெரிய சண்டையாக ஹவிஸ்மேட்ஸ் வந்து நிலைமையை சரி செய்ய பார்த்தனர். பாலாஜி சனத்திடம் தன்னை ஏன் எட்டி உதைத்தாய் என்று கேட்க, “நீயும் எட்டி உதை, முடிஞ்சது என சனம் ஆத்திரத்தில் கூற விவாதம் சூடானது. பின்னர், umpire ஆரி இடையில் புகுந்து என்னென்னமோ சொல்லி பாலாஜியை அனுப்பி வைத்தார்.

இன்னொரு பக்கம், சுஜியின் சில கருத்துக்கள் புடிக்காமல் சுரேஷும், சுரேஷ் செய்த சில காரியங்கள் புடிக்காமல் சுஜி, ஒருவரை ஒருவர் மற்றவர்களிடம் குறை சொல்லிக்கொண்டிருந்தனர்.

எவ்வளவு சண்டை என பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு, இது என்ன பிரமாதம் இதை விட ஸ்பெஷல் ஐடம் ஒண்ணு இருக்கு என்பது போல அமைந்தது, ஆரி மற்றும் சம்யுக்தாவுக்கு இடையிலான சண்டை. ஆரியை வந்து க்ளின் செய்யும்படி சம்யுக்தா சொல்ல, நேற்று செய்ய வேண்டியவர்களை செய்ய சொல்லுங்க நான் செய்றேன் என்று நாயகன் கமல் பாணியில் ஆரியும் கெத்து காட்ட, வாக்கு வாதம் சண்டையாக வெடித்தது. கடைசியில் ஆரி, சம்யுக்தா ஒரு தலைபட்சமாக இருப்பதாக கூற, சம்யுக்தா எழுந்து சென்று விட்டார்.


போன பிக்பாஸ் சீசன்களில் இருந்த காதல், நகைச்சுவை, சென்டிமண்ட் எல்லாம் இந்த பிக்பாஸ் சீசனில் குறைவாக உள்ள நிலையில் போட்டி மட்டுமே அதிகரித்து உள்ள நுழையில், யாருக்கு சப்போர்ட் செய்வது என Game of Thrones பார்ப்பது போல ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர். 

தொடர்ந்து பிக்பாஸ் செய்திகளை பெற நமது வலைத்தளத்தை subscribe செய்து இணைந்திருங்கள்.
1 comment:

//]]>