Related posts

Breaking News

Aari vs Bala- The real fight begins ( Bigg Boss Tamil Day 31 Review)

Bigg Boss Tamil Season 4ல் நாளுக்கு நாள் போட்டி அதிகரித்து வரும் நிலையில், கடந்த முடிந்த எபிசோட் அனல் பறந்தது என்றே சொல்ல வேண்டும். நீதிமன்றம் போல செயற்பட்டு வரும் Bigg Boss வீட்டில் சமீபத்தைய எபிசோடில், பாலாஜி vs சோம், ஆரி vs சம்யுக்தா மற்றும் கேபிரியல்லா vs சுரேஷ் ஆகிய வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. ஆனால் இவையெல்லாவற்றையும் விட காரசாரமாக நடந்த வழக்கு நீதிமன்று வெளியே நடந்த ஆரி மற்றும் பாலாஜிக்கு இடையிலான பஞ்சாயத்துதான். அத்தோடு இந்த எபிசோடில் கொஞ்சமே கொஞ்சம் ரொமான்ஸும் துளியளவு காமடியும் சேர்ந்திருந்தன. என்ன நடந்தது விரிவாகப் பார்க்கலாம். 

காலையில் கொடுக்கப்பட்ட டாஸ்கில் சுரேஷ் அவர்கள் ஏனைய ஹவுஸ்மேட்ஸுக்கு ஜோசியம் பார்க்க வேண்டும் என்றிருந்தது. முதலில் நிசாவை அழைத்த சுரேஷ் அவர்கள் அவரது தனித்தன்மையை கொண்டுவரும்படி அவரது பாஷையில் நக்கலாக கூறினார். பின்னர் சோமுவுக்கு ஜோசியம் பார்த்த அவர், சோமை நல்ல விதத்தில் அவரது ஆக்ரோஷத்தை வெளியே கொண்டு வரும்படி கூறினார், போலவே ரம்யாவுக்கு, அவர் மற்றவர்களை வீட்டை விட்டு வெளியேற செய்ய வைக்கக் கூடியவர் என கூறினார்.

பின்னர் தொடங்கிய நீதிமன்ற டாஸ்கில், சோமை puppet என கூறியதற்கு எதிராக வாத பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டன. இருந்தாலும் பாலாவால் சரியான காரணத்தை கூற முடியவில்லை. இதில் தீர்ப்பு சோமுக்கு சாதகமாக அமைந்தது. இதில் கவனிக்கதக்க விதமாக, சனம் கதைக்கும் பொழுது, அதை குறுக்கிடுவதாக சொல்லி அவரை கோர்ட்டுக்கு வெளியே செல்லும்படி நீதிபதி பாத்திரத்தில் இருந்த சுஜித்ரா காட்டமாக கூறினார். 

பின்னர், ஆரி மற்றும் சம்யுக்தாவுக்கு இடையிலான வழக்கில், ஆரியை கோர்னர் செய்வதாக சம்யுக்தா மீது குற்றம் சுமத்தப்பட, அதை சம்யுக்தா மறுத்தார். இடையில் பாலாஜி சலசலக்க நீதிமன்றம் சற்று அமளி துமளியானது. எனினும் தீர்ப்பு சம்யுக்தாவுக்கு ஆதரவாக கொடுக்கப்பட்டது. 

பின்னர் நடந்த கேபி மற்றுத் சுரேஷ்க்கு எதிரான வழக்கில், சுரேஷ் ஓவராக ரியாக்‌ஷன் செய்வதாகவும் மற்றவர்களை influence செய்வதாகவும் கூறப்பட்டது. இதை சுரேஷ் மறுத்தாலும் தீர்ப்பு கேபிக்கு சாதகமாகவே வழங்கப்பட்டது. 

இதன்பின், வெளியே வந்த கேபியிடம், “தன்னோடு இனிமேல் நீ கதைக்க வேண்டாம்” என காட்டமாக கூறிச் சென்றார். இன்றொரு பக்கம் ஷிவானி பாலாஜிக்கு சாப்பாடு ஊட்டிவிட, கேபி அதைப் பார்த்து புலம்ப, ஆஜித் கேபியை சமாதனம் செய்யும் விதமாக, அவர்கள் இருவருக்கு நடுவில் சென்று இருத்து கொண்டார். 

பின்னர், சம்யுக்தா அனைவரையும் அழைத்து வைத்து, ஆரியை சமாதனப்படுத்தும் விதமாக கதைக்க, ஆரி பாலாஜியின் நேர்மையற்ற விளையாட்டால்தான் சம்யுக்தா தலைவரானதை மீண்டும் மீண்டும் கூற, பாலாஜி ஒரு புறம் கடுப்பாக, இருவருக்குள்ளும் வெறித்தனமாக வாக்குவாதம் அனல் பறக்க, சேனல்காரர்களுக்கோ T.R.P எகிறியது. இவ்வண்ணமாக கடந்த Bigg Boss எபிசோட் நடந்து முடிந்தது. 

பாலாஜி பக்கம் நியாயமுள்ளதா? அல்லது ஆரி செய்தது நியாயமா? உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். தொடர்ந்து Bigg Boss செய்திகளை பெற வளைத்தளத்தை தொடருங்கள்.  

No comments

//]]>