Related posts

Breaking News

Bigg Boss Season 4 Tamil - உறுதி செய்யப்பட்ட போட்டியாளர்கள் யார் யார்?




பல எதிர்ப்புக்கள் மற்றும் தடைகளுக்கு மத்தியில், இன்றைய தினம் Bigg Boss Season 4 துவங்கியது. எதிர்ப்புக்கள் இருந்தாலும் எதிர்பார்ப்பையும் அதிகம் கொண்டது இந்த நிகழ்ச்சி. வழக்கமாக மே அல்லது ஜூன் மாதத்தில் தொடங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, இந்த முறை கொரானா நோய் தொற்று பரவல் காரணமாக பல தடைகளுக்கு மத்தியில் இன்று, ஒக்டோபர் 4ம் திகதி ஆரம்பமானது. 

ஏற்கனவே போட்டியாளர்களின் விபரங்கள் இணையத்தில் கசிந்திருந்தாலும், அவை உறுதி செய்யப்படாத்தலேயே இருந்தது. எனினும் இப்போது ஒவ்வொருவராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய தொடங்கிவிட்டனர். அவர்களின் விபரம் இதோ!


Shivani 



பகல் நிலவு, சரவணன் மீனாட்சி, ரெட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் போன்ற நாடகங்களிலும் ஜோடி Fun Unlimited போன்ற நிகழ்ச்சிகள் மேலமாகவும் ஏற்கனவே சின்னத்திரையில் கால் பதித்தவர் ஷிவானி என்பது குறிப்பிடத்தக்கது.

Anitha Sampath



சன் டிவியில் செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத், அவரது செய்தி வாசிக்கும் அழகிற்காகவே டிவிட்டரில் டிரெண்டிங் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற வருடம் வந்த செய்தி வாசிப்பாளரான லோஸ்லியாவுக்கு மாற்றீடாக இவர் இருப்பாரா? பொருத்திருந்து பார்ப்போம்.


Rio 



சன் மியூசிக் மற்றும் விஜய் டீவியில் தொகுப்பாளராக வலம் வரும் ரியோ சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தின் கதாநாயகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Jithan Ramesh



ஜித்தன் என்ற ஒரே ஒரு வெற்றி படத்தை மட்டுமே தன் கேரியரில் கண்ட ஜித்தன் ரமேஷிற்கு, இந்த பிக் பாஸ் திருப்புமுனையாக அமையுமா? உங்கள் கருத்தை கதண்ட செய்யுங்கள்.

Sanam Chetty


சென்ற வருட சீசன் மூலம் மிகப் பிரபலமான தரஷனின் முன்னாள் காதலியான சனம், இந்த சீசனில் களம் இறக்கப்பட்டுள்ளார்.


அத்தோடு, பாடகர் வேல் முருகன், நடிகர் ஆரி அர்ஜுன், பெரிதும் அறியப்படாத சோம் மற்றும் பாலா என்பவர்கள், நடிகை ரேகா மற்றும் இளம் நடிகை கேப்ரியலா ஆகியோரும் பிக்பாஸ் வீட்டிற்குள் களம் இறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


வேலை அதிகமாக உள்ள நாட்களிலேயே மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட பிக்பாஸ், இந்த லாக் டவுன் சமயத்தில் இன்னும் பல மக்களால் வெறித்தனமாக பார்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



No comments

//]]>