Related posts

Breaking News

ஸ்பேஸ் இல்லை- மீண்டும் மற்றவர்களை குற்றம் சாட்டிய அனிதா Bigg Boss Day 25- Full Recap


காலையில் ஒத்த சொல்லால பாடலுடன் தொடங்கிது இன்றைய Bigg Boss நிகழ்ச்சி. பாடல் முடியும் போதே, நேற்றைய “தங்கமே உன்னத்தான் தேடி வந்தேன்” டாஸ்க் தொடர்வதாக பிக்பாஸ் அறிவித்தார். அதனால், ஆளும் தரப்பினரை பற்றி நல்லதாக நாலு வார்த்தை சொல்லும் படி மற்றைய ஹவுஸ் மேட்ஸ்க்கு கட்டளையிடப்பட்டது.

இதில் ரம்யா, சனம் மற்றும் ஷிவானி ஆகியோர், ஆளும் தரப்பில் இருந்தவர்களை பற்றி புகழ்ச்சியாக பேசினர். குறிப்பாக, ஷிவானி பாலாஜியை நேர்மையானவர் என குறிப்பிட்டிருந்தார். பின் சனம், “அர்ச்சனா எதைக் கேட்டாலும் கொடுப்பார்” என்று கூற, இடை மறித்த பாலாஜி, அர்ச்சனாவடம் சனம் எலுமிச்சை பழம் கேட்ட போது கொடுக்கவில்லை என நக்கல் செய்தார். பின்னர் இந்த எலுமிச்சை பழ விவகாரம் பூசணிக்காய் போல பெரிய பிர்ச்சினையாகி, பாலாஜி மற்றும் சனத்துக்கு இடையில் பெரிய வாக்குவாதத்தில் முடிந்தது. 

பின், நிஷா அம்மி அரைத்துக் கொண்டே அதன் நன்மைகளை பற்றி மற்றவர்களுக்கு கூறிக்கொண்டிருந்தார், “இவ்வளவு நன்மைகள் அடங்கிய விஷயத்தை மற்றவர்களும் செய்யலாமே என பாலாஜி கேட்டார்” பின் அவரே அம்மியை அரைத்தும் பார்த்தார். அத்தோடு, தான் கேப்டன் ஆனால் நிஷாவை மட்டும் அம்மி அரைக்க விடாமல் மற்றவர்களையும் அம்மி அரைக்க வைப்பதாக ஷிவானியிடம் கூறிக் கொண்டிருந்தார்.

பின்னர், அர்ச்சனாவை confession ரூமிற்குள் அழைத்த பிக்பாஸ், அன்றைய நாளுக்கான டாஸ்க்கை கொடுத்தார். அன்றைய நாளுக்கான டாஸ்க் என்னவெனில், போட்டியாளர்கள் இந்த தருணத்தில் யார் யாரை ‘miss’ செய்கிறோம் என்று பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே.

முதலில் வந்த Gabi, மேடைக்கு வரும் போதே அழ்த்தொடங்கிவிட்டார். பின்னர் சமாளித்துக்கொண்டு, தன் அம்மாவை எவ்வளவு மிஸ் செய்கிறோம் என எடுத்து கூறினார். அடுத்து வந்த ரம்யாவும் தன் அம்மாவை எவ்வளவு மிஸ் செய்கிறோம் என கூறி, அர்ச்சனா அவர்கள் ஆர்த்தி எடுத்தது தனது அம்மாவை ஞாபகமூட்டியதாக மிகுந்த கவலையுடன் கூறிச் சென்றார்.

பின்னர் வந்த சனம், தனக்கு கிடைத்த புதியதொரு உறவை பற்றி கூறினார். அடுத்த வந்த ஜித்தன் ரமேஸ், தனது அப்பா செய்த தியாகங்களையும் அத்தோடு தனது பிள்ளைகளுக்கு தான் எப்போதும் ஹீரோவாக இருக்க வேண்டும் என்றும் கூறிச் சென்றார். பின்னர் வந்த சம்யுக்தா, தனது மகனை பிரிந்து வாடுவதையும் தன் கணவரை முன்பு போல பார்க்க நினைப்பதையும் வெளிப்படுத்தி சென்றார்.


சுரேஷ் அவர்கள் தனது மனைவி மக்களை பிரிந்து வாடுவதையும், சக போட்டியாளரான பாலாஜி தனது மகனை நினைவூட்டுவதாகவும் கூறிச் சென்றார். அடுத்த வந்த ரியோ அவர்கள் தன் மனைவி, அம்மா மற்றும் குழந்தையை பிரிந்திருக்கும் வேதனையையும், அர்ச்சனா அவர்கள் தனது கணவன் மற்றும் பிள்ளையை பிரிந்திருக்கும் வேதனையையும் பகிர்ந்து சென்றனர். 

பின்னர் வந்த அனிதா அவர்கள் தனது கணவனை பிரிந்திருப்பதை பற்றி பகிர்ந்துக் கொண்டிருந்தார். ஏனைய போட்டியாளர்களை விட அதிக நேரம் எடுத்து கொண்ட அவர், மற்றவர்கள் சோர்வாகி களைக்கும் அளவுக்கு கணவர் புராணம் பாடியது, ஹவுஸ் மேட்ஸை மட்டுமல்லாது பார்த்துக் கொண்டிருந்தவர்களையும் எரிச்சலூட்டியது. இதைப் பார்த்து கேபி ஒரு புறம் கொட்டாவி விட, ஆஜித் மற்றும் ரம்யா இருவரும் புலம்பி சிரிக்க, சுரேஷ் அவர்கள் நம்மளை போன்று மண்டையை சொரிந்துக் கொண்டிருந்தார்.

அவ்வளவு நேரம் கதைத்து விட்டு, பின்னர் “அடுத்ததாக அம்மாவை” என என ஆரம்பித்து இழுத்துக் கொண்டு சென்றவரை சம்யுக்தா மட்டும் இடை மறித்திராவிட்டால் இரவு முழுவதும் இதையே கூறிக்கொண்டிருந்திருப்பார் போல. 

அவ்வளவு நேரம் கதைத்து விட்டு வந்தாலும், மற்றைய ஹவுஸ்மேட்ஸ் தன்னை ஒழுங்காக கதைக்க விடவில்லை எனவும் தனக்கு உரிய ஸ்பேஸை (இடத்தை) தருவதில்லை எனவும் அநியாயத்திற்கு புலம்பிக் கொண்டிருந்தார். இதற்கு மேல் ஸ்பேஸ் என்றால் கமல் அவர்கள் சொல்லியது போல அவரை விண்வெளியில்தான் கொண்டு சென்று விட வேண்டும் போல. 

பின்னர் வந்த நிஷா அவர்கள் மிக எளிமையாக தனது கணவன் மற்றும் பிள்ளையை எந்தளவு மிஸ் செய்கிறேன் எனக் கூறிச்செல்ல பிக் பாஸ் அன்றைய எபிசோட் நிறைவுற்றது. 

தொடர்ந்து பிக்பாஸ் அப்டேட்களை பெற எமது வளைத்தளத்தோடு இணைந்திருங்கள்.No comments

//]]>