Related posts

Breaking News

Samsung Galaxy S20 ஏன் இந்த மொபைல் போன் ரொம்ப ஸ்பெஷல்?

Samsung Galaxy S20  ஏன் இந்த மொபைல் போன் ரொம்ப ஸ்பெஷல்?



சமீபத்தில் Samsung நிறுவனமானது, தனது புது மாடல் மொபைல்களான Samsung Galaxy S20, Galaxy S20+, Galaxy S20 Ultra மற்றும் Galaxy Z Flip ஆகிய ஃபோன்களை சந்தைக்கு அறிமுகம் செய்தது. அதில் ஒன்றுதான் இந்த Samsung Galaxy S20 ஆகும். ஆண்ராய்ட்டில் வெளிவந்த ஃபோன்களில், சிறந்த மொபைல்களில் ஒன்றாக இது இருப்பதாக பலரும் கருதுகின்றனர். அப்படி என்ன சிறப்பம்சங்கள் இந்த மொபைலில் இருக்கிறது, பார்க்கலாம்.




Build Quality and Display

Galaxy S20 மொபைலின் முன் புறம் மற்றும் பின் புறம் ஆகியன கிளாஸினால் செய்யப்பட்டுள்ள அதே வேளை, இரண்டு பக்கங்களுமே கொரில்லா கிளாஸாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், போன் அடிபட்டால் ஏற்படும் டேமேஜை குறைக்க முடிகிறது. மேலும், இது 163 கிராம் நிறையை மட்டுமே கொண்டிருப்பதால், கைகளில் வைத்து பாவிப்பதும் இலகுவாகும். அத்தோடு, 6.2 inch அளவு கொண்ட பெரிய திரையை தன்னகத்தே கொண்டுள்ளது இந்த மொபைல். இந்த திரை 120 Hz ரீவ்ரெஷ் ரேட்ஸை கொண்டுள்ளது. இதனால், இதை பாவிக்கும் போது அதிவேகமாக இருப்பது போல தோன்றும். குறிப்பாக கேம்கள் விளையாடும் போது ஒரு அருமையான அனுபவம் கிடைக்கும். 

Processor and Storage

இதில், Snapdragon 865 எனப்படும் மிகவுமே அதிவேகமான, புத்தம் புதிய ப்ரோசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதைக்கொண்டு, இப்போதைக்கு ஆண்ராய்டில் வெளியாகியிருக்கும் எந்த ஒரு கேமையும் இலகுவாக விளையாட முடியும். மேலும், இந்தியாவை ஒத்த சந்தைகளில் சாம்சுங் இன் Exynos 990 என்ற ப்ரோசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் Snapdragon 865 ஐ ஈடுசெய்யும் ப்ரோசசர்தான். இரண்டுமே 7 நனோ மீட்டர் சிப் என்பதால், குறைந்தளவு பேட்டரி பாவனையில், அருமையாக வேலை செய்யும் என ஊகிக்கலாம். 

ஆண்ராய்ட் 10 மற்றும் Samsung UI 2 இல் இயங்கும் இந்த மொபைல் 12 GB Ram ஐ கொண்டியங்குகிறது. 128 GB அளவு இன்டர்னல் மெமரி கொண்ட இந்த ஃபோனில் UFS 3.0 இருப்பதால், file transfer செய்தாலோ அல்லது இன்ஸ்டால் செய்த ஆப்களை ஓபன் செய்தாலோ மிக வேகமாக அவற்றை இயக்க முடியும்.  

Cameras



இந்த ஃபோனில் பின்பக்கமாக மூன்று கேமராக்கள் உள்ளன. முதலில், 12 MP கொண்ட Primary Camera அருமையான போட்டக்களை எடுக்க உதவுகிறது. இதில் இருக்கும் புதிய பெரிய சென்சார் குறைவான வெளிச்சம் உள்ள சூழ்நிலைகளிலும் நல்ல போட்டோக்களை எடுக்கிறதாம். அடுத்து, 64 MP கொண்ட டெலி போட்டோ கேமரா, தூரத்தில் உள்ளவற்றை தெளிவாக எடுக்க பயன்படுகிறது. அத்தோடு, மூன்றாவதாக இருக்கும் 12MP கேமரா Ultra Wide கேமராவாக, அகலமான போட்டோக்களை எடுக்க பயன்படுகிறது. இவை எல்லாமே, புதிய தரமான சென்சார்களை கொண்டுள்ளதால், தரமான அவுட்புட்களை நமக்கு தரும் என எண்ணலாம். மேலும் முன்புறம் இருக்கும் 10 மெகா பிக்‌ஷல்களைக் கொண்ட ஃசெல்பி கமராவும் f/22 என்பதால் கவலையே இல்லாமல் அழகான ஃசெல்பிகளை எடுத்துத் தள்ளலாம். 

Other Specs

இதில், 3.5mm ஆடியோ ஜேக் இல்லை என்பதால், USB Type C பின் கொண்ட ஹியர் போனையே பயன்படுத்த முடியும். இதனால், கஸ்டமரை தேடி திரிய விடாமல் இருக்க AKG brand USB Type C ஹேண்ட்ஸ் ஃப்ரீ ஒன்று பாக்ஸுடனேயே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் இருக்கும் Ultrasonic கைரேகை ஸ்கேனர், மிகவும் ஃபாஸ்டாக வேலை செய்யக்கூடியது. அத்தோடு, இதில் இருக்கும் இன்னுமொரு ஸ்பெஷாலிட்டி, இந்த ஃபோன் 5Gயை கொண்டது என்பதுதான்.

4000 mah அளவு கொண்ட Galaxy s20 பேட்டரியானது 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டது. அதன் சார்ஜ் இறங்கினாலும் கடகடவென பேட்டரியை மீள் நிரப்பி விடலாம் என்பது இன்றுமொரு அட்வான்டேஜ். மேலும், இந்த ஃபோனில் Samsung dex feature இருப்பதால், இதனை டெக்ஸ்டாப் போல கனக்ட் செய்து பயன்படுத்தலாம். கோஸ்மிக் க்ரே, க்ளவுட் ப்ளூ, க்ளவுட் பிங்க், கோஸ்மிக் வைட் என நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது இந்த ஃபோன்.



விலையை பொறுத்தவரை, அமேசான் டாட் இன் இல் கிட்டதட்ட 67000ற்கு கிடைப்பதாக அறிய முடிகிறது. புத்தம் புதிய அம்சங்களைக் கொண்ட நல்ல கேமரா மொபைல் வாங்க இருப்பவர்கள் இதைக் கருதலாம்.




No comments

//]]>