Related posts

Breaking News

Samsung Galaxy M31, பட்ஜட் விலையில் நல்ல மொபைலா?

Samsung Galaxy M31, பட்ஜட் விலையில் நல்ல மொபைலா?

கடந்த ஆண்டு வெளியான Samsung Galaxy M30s ஆனது பட்ஜட் விலையில் நல்ல features உடன், ஒரு நல்ல brand மொபைல் வாங்க நினைப்பவர்களுக்கு, சரியான தெரிவாக இருந்தது. அதனால், இந்த மொபைல் விற்பனை ரீதியில் சக்ஸஸ் ஆனது. இந்த சக்ஸஸை தொடர்ந்து, M30s இனது அப்டேடட் வெர்ஷனாக வந்திருக்கிறது, Samsung Galaxy M31. இந்த Samsung Galaxy M31, இந்த 2020க்கு ஒரு நல்ல மொபைலா? அப்படி இதில் என்ன எல்லாம் புதிதாக கொண்டு வந்திருக்கிறார்கள்?, பட்ஜெட் விலையில் இது நல்ல மொபைலா? விரிவாகப் பார்ப்போம். 

Image Courtesy : https://www.samsung.com/in/microsite/galaxy-m/m31/

Display and Build Quality 

6.4 inch அளவு கொண்ட சூப்பர் அமொலெட் டிஸ்ப்ளே, இதில் U வடிவத்தை கொண்ட நோட்ச் இருப்பதால் இதனை Infinty U டைப் டிஸ்ப்ளே என Samsung தரப்பினர் அழைக்கிறார்கள், இதில்தான் செல்ஃபி கமரா பொருத்தப்பட்டுள்ளது . சாம்சங் டிஸ்ப்ளேக்கள் எப்போதுமே டாப்தான், full hdயிலான இந்த மொபைல் டிஸ்ப்ளேயும் டாப்தான். மேலும், இதில் Widevine L1 எனப்படும் தரம் அளிக்கப்பட்டிருப்பதால், Netflix, Amazon Prime Video ஆகியவற்றை HDயில் ஸ்டீரிம் செய்து பார்க்கலாம். 

மொபைலின் பின்புறம் இப்போது மூன்றுக்கு பதிலாக நான்கு கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன + flashlightஉம் இதில் உள்ளது. மேலும், அதிவேகமாக இயங்கக்கூடிய ஃபிங்கர் ப்ரிண்ட் ஸ்கேனரும் இதில் உள்ளது. அத்தோடு, சைடில் உள்ள ஸ்லோட்டில் இரண்டு சிம் கார்ட்டுகள் மற்றும் ஒரு மெமரிகார்ட் என்பனவற்றை போட்டுக்கொள்ள முடிவது இன்னுமொரு சிறப்பம்சம். மற்றைய பல மொடல் மொபைகள் போல் இல்லாமல் இதில் 3.5mm கொண்ட ஹெட்ஃபோன் ஜெக்கும் இதில் உள்ளது. பின்புறம் பார்ப்பதற்கு ஒரு நல்ல தரமான மொபைலுக்குரிய பில்டுடனே உள்ளது. 

Camera

Image Courtesy : https://www.samsung.com/in/microsite/galaxy-m/m31

இதன் முன்புறம் உள்ள கேமரா 32 மெகா பிக்சல்களை கொண்டது. இதில் அருமையான செல்ஃபிக்கள் மட்டுமல்லாது  4K குவாலிடியில் 30 Frames per Second என வீடியோக்களை எடுக்க முடிவது இன்னுமொரு அட்வாண்டேஜ். பின்புறம் உள்ள நான்கு கேமராக்களில், முதலாவது 5 மெகா பிக்சல் டெப்த் சென்சார் கேமரா, இது portrait ஷாட்ஸ் எடுக்க பயன்படுகிறது. மேலும், 64 மெகா பிக்சல்களை கொண்ட மெயின் கேமரா, வழக்கம் போல நல்ல ஷாட்களை எடுக்க பயன்படுகிறது, மேலும் இதில் இருக்கும் நைட் மோட் மூலம் இரவில் குறைந்த வெளிச்சத்தில் கூட நல்ல ஃபோட்டோக்களை எடுக்க முடியும். அத்தோடு, 8 மெகா பிக்சல்களைக் கொண்ட Wide Angle கேமரா, நல்ல அகலமான ஃபோட்டோக்களை எடுக்க உதவுகிறது. உதாரணத்திற்கு, பள்ளி, கல்லூரி அல்லது கல்யாண வீடுகளில் நிறைய பேரை வைத்து குரூப் ஃபோட்டோ எடுக்க வேண்டுமெனில் இது one of the best. மற்றும், 5 மெகா பிக்சல்களை கொண்ட மேக்ரோ கேமரா ஒன்றும் இதில் உள்ளது. இது சிறிய அளவுள்ள பொருட்களை விஸ்தாரமாக எடுக்க பயன்படுகிறது.

Processor and Storage

ஆண்ராய்டின் 10வது பதிப்பில் இயங்கும் இந்த மொபைலை, Exynos 9611 என்ற சிப் பவர் அப் செய்கிறது. இது சென்ற ஆண்டில் வந்த சிப் என்றாலுமே, இன்றுமே இது நல்ல ப்ரோசசர்தான். பொதுவாக கேம் விளையாடவேண்டுமன்றாலும் சரி, இதர வேலைகளை செய்யவும் சரி, இந்த சிப் போதுமானது. இதோடு, 64 GB ஸ்டோரேஜ் 6 GB Ram அல்லது 128 GB ஸ்டோரேஜ் 12 GB Ram என இரண்டு வேரியண்ட்களில் கிடைகிறது என்பதால், வேகத்திற்கு குறைவிருக்காது.

Other Features 

Samsung இன் M சீரிஸ் மொபைகளின் சிறப்பம்சமே அதன் பேட்டரிதான். இதில் 6000 mah அளவு கொண்ட ஒரு நல்ல அதிக நேரம் பாவனைக்கு உகந்த சூப்பரான பேட்டரி உள்ளதால், சார்ஜ் போய்விடுமோ என்ற கவலையில்லை. மேலும், 15 வாட்ஸ் சார்ஜர் ஒன்று பாக்ஸுனேயே வருவது இன்னுமொரு சிறப்பம்சம். கருப்பு மற்றும் ஓசியன் பளூ என இரண்டு நிறங்களில் கிடைகிறது. 

எல்லாவற்றையும் விட இதன் முக்கியமான சிறப்பம்சம், இதன் விலை. இதன் ஆரம்ப வேரியண்டான 6GB Ram 64 GB Storage கொண்ட மாடல் ரூபா ₹14,999ல் இருந்து கிடைக்கிறது. மேலும், இதைப்பற்றிய விபரங்களை அறிய https://www.samsung.com/in/microsite/galaxy-m/m31/ என்ற தளத்திற்கு சென்று பார்வையிடலாம். மேலும் இது amazon.in இல் விற்பனைக்கு கிடைக்கிறது.

என்னை பொருத்தவரை, ஒரு கம்மியான விலையில், நல்ல ஃபோட்டோக்களை எடுப்பது என்றாலும் சரி அல்லது அளவாக கேம்ஸ் விளையாட என்றாலும் சரி அல்லது நல்ல பேட்டரி ஃலைப் கொண்ட மொபைல் வேண்டுமென்றாலும் சரி அல்லது நல்ல அருமையான டிஸ்ப்ளே கொண்ட மொபைல் வேண்டுமென்றாலும்  சரி, இது ஏற்றதாக இருக்க வேண்டும். 






No comments

//]]>