Related posts

Breaking News

விஜய் மூவி என்றாலே பிரச்சினைதான், ஏன் அப்படி?

விஜய் மூவி என்றாலே பிரச்சினைதான் ஏன் அப்படி?


விஜய் மூவி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்

விஜய் மூவி என்றால், ரசிகர்களுக்கோ ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாகதான் இருக்கும். காரணம், அவரது படங்களில் பாட்டு, சென்டிமண்ட், நடனம், காமடி, சண்டைக்காட்சிகள் என அனைத்து விடயங்களுமே கவராகிவிடும், அவை நன்றாகவும் இருக்கும். இதனால் எல்லா தரப்பு மக்களுமே, விஐய் மூவி என்றால் முண்டியடித்துக் கொண்டு தியேட்டரில் கூடிவிடுவார்கள். ஏனெனில், துப்பாக்கி, மெர்சல் போல மெகா ஹிட் படங்களாகட்டும் அல்லது குருவி போன்ற சுமார் படங்களே ஆகட்டும், பாட்டு, டான்ஸ், ஃபைட் என எண்டர்டெய்ன்மண்டுக்கு மினிமம் கேரண்டி இருக்கும். போலவே தயாரிப்பாளர் தரப்பிலிருந்து பார்த்தாலுமே, பட ப்ரொமோஷன் வேலைகளை விஜய் ஈடுபாட்டோடு செய்வார் என்பதால், அங்கும் அவருக்கு நல்ல பெயர்தான். இப்படி, சினிமாவில் மிக முக்கியமான இரண்டு தரப்புகளுமே விஜய்க்கு ஆதரவு தெரிவித்தாலும், இவர் படங்களுங்கு தொடர்ந்து பிரச்சினைகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. ஏன் இப்படி, இது எப்போதிருந்து தொடங்கியது, விரிவாகப்  பார்க்கலாம்.பிரச்சினைகளின் தொடக்கம்விஜய், தனது ஆரம்பகால படங்களில் ஒரு நடிகனாக, அதாவது சினிமாத்துறையை சேர்ந்தவராக மட்டுமே வலம் வந்தார். இவரது கெரியரை எடுத்துப் பார்த்தால், கிட்டதட்ட ஆரம்பத்தில் வந்த அத்தனை திரைப்படங்களுமே ரொமான்டிக் படங்கள்தான். உதாரணத்திற்கு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை, பூவே உனக்காக, லவ் டுடே, ஒன்ஸ் மோர், காதலுக்கு மரியாதை என 90 களில் இருந்து 2001ல் வந்த சாஜஹான் வரை, எல்லாமே காதல் படங்கள்தான். இதில் 2002ல் தமிழன் படத்தில் இருந்துதான், ஆக்‌ஷன் பக்கமே விஜய் திரும்புகிறார். பின்னர், பகவதி, திருமலை, மதுர என அடுத்தடுத்த ஆண்டிகளில் ஆக்‌ஷன் படங்களை அதிகமாக செய்யத் தொடங்குகிறார் விஜய். இதில் 2002ல் வந்த தமிழன் படத்தில், அநீதியை எதிர்த்து போராடும் வக்கீலாக விஜய் நடித்திருப்பார். இங்கேதான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது.

இப்படத்திற்காக வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையென அரசியல்வாதி போல இருக்கும், விஜய் போட்டோ ஒன்று வெளியானதும், விஜய்யும் அரசியலுக்குதான் வரப்போகிறார் என சுத்தியிருந்த அரசியல்வாதிகள் டென்சன் ஆகிவிட்டனர். ஏனெனில், பொதுவாக ஒரு ஹீரோ தன் படங்களில் அரசியல் பேசினால், அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் அதிகம். இருப்பினும், அப்படத்தில் விஜய் அரசியல்வாதியாக நடிக்கவில்லை என்பது தெரிந்த பின், படம் வெளியாகியது. அதன்பின், புதிய கீதை என்ற படம் ஆரம்பத்தில் கீதை என்ற டைட்டில் வைக்கப்பட்டு, அதில் கிறிஸ்துவரான விஜய் நடிக்கிறார் என்பதால், சில வைஷ்ணவ அமைப்புக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்ப, அது புதிய கீதை என பெயர் மாற்றப்பட்டு ரீலிஸானது. ஆனால், கீதைக்கும் இந்த படத்திற்கும் எந்த சம்மந்தமுமே இருக்காது. ஆனால் இந்த டைட்டிலால்தான் பிரச்சினை.

இதில் ஒரு விந்தை என்னவென்றால், கமலஹாசன் நாத்திகராக இருந்தாலும், கடவுள் இல்லை என்று சொன்னாலும், அவரது ஆரம்ப காலம் முதலே, கல்யாண ராமன், ராம் லக்‌ஷ்மண் முதல் தசாவதாரம், விஸ்வரூபம் வரை திருமாலின் நாமங்களைக் கொண்ட படங்களில் நடித்தாலும், இந்த அமைப்புக்கள் அவரை ஒன்றும் சொல்வதேயில்லை. ஆம், அவர் பிறப்பில் ஒரு அய்யங்கார்தான், ஆனாலும் கடவுள் மறுப்பாளன் ஆயிற்றே.சரி அதை விடுவோம்.

இடையில் விஜய் அவர்களின் தந்தையே “விஜய் அரசியலுக்கு வருவார்” என ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். மேலும், என்டிடிவி என்னும் சேனலுக்கு விஜய் அளித்த பேட்டியில், அவரிடம் “அரசியலுக்கு வருவீர்களா?” என கேட்கப்பட்ட கேள்விக்கு, விஜய் அவர்களே, தனக்கு இண்ரஸ்ட் இருப்பதாகவும், இதற்கான பேஸை தான் செய்துக் கொண்டுதான் இருக்கிறேன், தான் ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றியுள்ளேன், காலம் வரும் போது தானாக எல்லாம் அமையும் என்பது போல பதிலளித்திருந்தார். இதையும் அரசியல் பக்கம் இருந்தவர்கள் நோட் செய்யாமல் இல்லை.

பிரச்சினைகளின் உச்சம்


விஜய் அவர்கள், தனது ஐம்பதாவது படமான சுறா படத்தை, The Leader என்னும் டிஸ்கிரிப்ஷனோடுதான் வெளியிடுவதாக இருந்தது. ஆனால், சன் பிக்சர்ஸின் படமான அதை, அதுவும் தி.மு.க ஆட்சியில் இருக்கும் போதே The Leader என்ற பெயரோடு வெளியிட அனுமதிப்பார்களா? மறைந்த முன்னால் முதல்வர் ஐயா கலைஞரை மட்டுமே, அவர்கள் தலைவராக  கருதுவதால், அந்த Leader என்ற பெயரொட்டு நீக்கப்பட்ட பின்னரே சுறா திரைப்படம் வெளியானது. ஆனால் படம் வெளியானவுடன் இந்த படத்துக்கு ஏன் இத்தனை சலம்பல் என்பது போல ரசிகர்கள் பேசிக்கொண்டனர்.

பின்னர், காவலன் திரைப்படம் வெளிவந்த காலகட்டத்தில் சில நெருக்கடியான அரசியல் சூழ்நிலைகள் காணப்பட்டன, ஆகவே சன் பிக்சர்ஸ் தயாரித்த படத்திற்கு போட்டியாக அதே திகதியில் வந்த மற்ற தயாரிப்பு நிறுவனங்களின் படங்களுக்கு தியேட்டர் கிடைக்காத பிரச்சினை ஒன்று நிலவி வர, காவலன் படமும் அதில் மாட்டிக்கொண்டது. பின்னர், அந்த நேரத்தில் இருந்த எதிர்கட்சியின் உதவியுடன் படத்தை ரிலீஸ் செய்தார் விஜய்.

மேலும், துப்பாக்கி படத்தில், இஸ்லாமியரை தவறாக சித்தரிப்பதாக கூறி, சில அமைப்புக்கள் போர் தொடுக்க, படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும் முறையே மன்னிப்பு கேட்டு, அவ்வாறாக தவறான எண்ணத்துடன் காட்சிகள் சித்தரிக்கப்படவில்லை எனக் கூறி, பிரச்சினைக்குரிய காட்சிகளை நீக்கிய பின்னரே படம் வெளியானது. பல சிக்கல்களுக்கு பின் ரீலிஸான இந்த படம் வெளியாகி எட்டு வருடங்கள் ஆனாலும் கூட இந்த படத்தின் ஹிட், விஜய் அவர்களின் கேரியரில் மறக்க முடியாத ஒன்றாகும்.

அடுத்து தலைவா படத்தின் சிக்கல்தான் பெரும் சிக்கல். தலைவா என்ற பெயர் மட்டுமல்லாமல், time to lead என்ற டைட்டிலின் கீழ் உள்ள லைனும் சொல்லவே, அப்போதிருந்த அரசுடன் பகை உண்டாகி, தலைவா பட ரிலீஸ் திகதியில் பிரச்சினை ஏற்பட்டுபோனது. வெளிநாடுகளில் வெளியான பின்னரே, தலைவா படம் தமிழ்நாட்டில் வெளியானது. இந்த சிக்கல்களினால் அப்போது பெரிய ஓப்பனிங் இப்படத்திற்கு கிடைக்காமல் போனது. மேலும் படத்தின் திரைக்கதையும் சுமார் என்பதால் படம் பெரிதாக ஓடவில்லை. வழக்கமாக, எந்த படத்திற்கு பிரச்சினை வருகிறதோ அதற்கு ஓப்பனிங் ஹைப் கிரியேட்டாவதால், நல்ல ஆரம்ப வசூல் கிடைக்கும் வாய்ப்புக்கள்தான் அதிகம். ஆனால், தலைவா பட விவகாரத்தில், படம் ரீலிஸாகும் தியேட்டரில் குண்டு வெடிப்பதற்கான அச்சுறுத்தல் நிலவுவதாக கூறி படத்தின் ஓப்பனிங்கையே காலி செய்து விட்டனர். இந்த “time  to lead” என்ற வசனத்திற்காக விஜய் கைகளைக் கட்டிக்கொண்டு மன்னிப்பு வீடியோ வெளியிட்டதெல்லாம் ஞாபகம் வருகிறதா மக்களே?பின்னர், கத்தி படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்காவுக்கும் இலங்கை அரசியல் ஆளுமைகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி, படத்தை தடை செய்ய சொல்லி சில தமிழ் பற்று கொண்ட அமைப்புகள் கோஷமிட்டன. அதன் பிறகு, சில பல செட்டில்மண்டுகளுக்கு பின் அவர்களெல்லாம் கப்சிப்பாகி விட்டனர். பின்னர், விஜய், கத்தி பட கிளைமேக்ஸில் பேசும் டயலாக்கில், 2G ஊழல் பற்றி சொல்ல, இன்னும் முடிவு கிடைக்காத வழக்கை பற்றி, எப்படி ஒரு திரைப்படத்தில் கருத்து சொல்லலாம், என ஒரு பெரும் விவாதமே நடந்தது.

பின்னர், மெர்சல் படத்தில் சிங்கப்பூரில் ஜி.எஸ்.டி இந்தியாவை விட குறைவு எனவும், அங்கு தரமான மருத்துவம் இலவசம் எனவும் விஜய் கூறியிருப்பார். இந்த காட்சிகள், அப்போது மத்தியில் ஆட்சி செய்தவர்களை உசுப்பேற்ற, அவர்களும் போட்டிக்கு கதைக்கப்போய், கடைசியில் விஜய் இந்தியளவில் டிரண்டாகி, சுமாராக ஓடிக்கொண்டிருந்த மெர்சல் படமும் இந்த டிரெண்டிங்கினால் ப்ளாக்பஸ்டர் ஆனது.

அடுத்து, சரக்கார் படத்திற்கும் இதேதான் நடந்தது, அதில் இலவசமாக கொடுத்த மிக்ஸி, கிரைண்டரை போட்டு உடைப்பது போல ஒரு காட்சி வரும். இது ஆளுங்கட்சியை கடுப்பேற்ற, அவர்களும் படத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்க, படத்தில் இருந்து அக்காட்சிகளை நீக்க வேண்டும் என்றார்கள். மக்களும், படத்திலிருந்து காட்சியை நீக்கும் முன் படத்தை பார்த்து விட வேண்டும் என தியேட்டருக்கு ஓட, கொஞ்சம் சுமாராக போய் கொண்டிருந்த சர்கார் படம் நல்ல வசூலை தயாரிப்பாளருக்கு கொடுத்தது. ஆனால், இதை சன் பிக்சர்ஸ் தயாரித்ததனாலயோ என்னவோ, இலவசமாகக் கொடுத்த டீவியை போட்டு உடைப்பது போல காட்சிகள் எடுக்கப்படவில்லை.


இதில் மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவல்லி என்ற பெயர்தான், வில்லியான வரலட்சுமிக்கு வைக்கப்பட்டிருக்கும். அவரும் அதே ஸ்டைல் சாரியில்தான், படம் பூராவும் வலம் வருவார். இதில், நம்பர் 1, நம்பர் 2 என இரண்டு அரசியல்வாதிகள் வேறு இப்படத்தில் இருப்பார்கள். இது போதாது என்று, விஜய் ரசிகர்கள் வேறு சும்மா இருக்காமல் டிக்டாக் செய்கிறேன் பேர்வழி என்ற பெயரில், வீட்டில் உள்ள மிக்ஸி, கிரைண்டரை எல்லாம் போட்டுடைத்து பிரச்சினையை இன்னுமே தீவிரம் பண்ணியிருப்பார்கள். இதற்கு முன் நடந்த சர்கார் ஆடியோ லோண்ஞ்சில் வேறு விஜய் அவர்கள், “மெர்சல்ல அரசியல் பண்ணிருந்தோம், சர்கார்ல அரசியல்ல மெர்சல் பண்ணிருக்கோம்” என்று பேசி பங்கம் பண்ணியிருப்பார்.

போலவே, சமீபத்தில் வந்த பிகில் மூவி ஆடியோ லோண்ஞ்சில் வேறு, பூக்கடையில் வேலை செய்தவனின் குட்டிக்கதையை சொல்லி, “எவன் எவன எங்கெங்க வைக்கணுமோ, அவன் அவன அங்கங்க வைக்கணும்” என்று சொல்லி, ஒட்டு மொத்த கட்சிக்காரர்களினதும் மொத்த வெறுப்பையும் சம்பாரித்துக்கொண்டார் விஜய். சரி, இவரது அடுத்த படமான மாஸ்டர் படமாவது பிரச்சினை இல்லாமல் வெளிவரும் என பார்த்தால், சூட்டிங் நடக்கும் போதே அதை இடை நிறுத்திவிட்டு, ஐ.டி ரெய்டுக்காக விஜயை அழைத்துச் சென்றனர். மேலும், நெய்வேலி என்.எல்.சியில் நடைபெறும் மாஸ்டர் திரைப்பட படப்பிடிப்பை அங்கே நடத்த விடக்கூடாது என வேறு இப்போது இன்னொரு பக்கம் பிரச்சினை வர, ரசிகர்கள் எல்லோரும் விஜய்கு ஆதரவாக அங்கே திரண்டுவிட்டனர். பின்னர், போலிஸின் பலத்த பாதுகாப்போடுதான் சூட்டிங் நடந்தது என்பது தனிக்கதை.விஜய் மூவி என்றாலே ஏதாவது பிரச்சினை என்ற காலம் போய், இப்போது விஜய் மூவி ஷூட்டிங் என்றாலே பிரச்சினை என்னும் அளவுக்கு நிலைமை வந்துவிட்டது. ஆனால், ஒரு பக்கம் பார்த்தால் படத்திற்கு இது நல்ல ப்ரொமோஷனாக இருப்பதுடன், விஜய் இன் புகழையும் இது அதிகரிக்கதான் செய்கிறது. சமீபத்தில் வந்த குட்டி ஸ்டோரி பாடலில் விஜய் அவர்களின் வரிகள், அவரது எதிரிகளை சீண்டியிருப்பதுதான் இப்போது ஹொட் டொபிக். ஒரு பாட்டிற்கே இப்படி என்றால், ஆடியோ லோஞ்சில் விஜய் பேசிய பின், எப்படியெல்லாம் விவாதங்கள் நடக்கப் போகின்றனவோ? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.No comments

//]]>