Related posts

Breaking News

புலியுடன் சேர்ந்து குட்டித் தூக்கம் போட்ட பிக்பாஸ் சாண்டி

சாண்டி, மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் நடனமாடுபவராக அறிமுகமாகி, இப்போது நம்பர் 1 டான்ஸ் மாஸ்டர்களில் ஒருவாராக இருப்பவர். இவருக்கு ஏற்கனவே ரசிகர் பட்டாளம் இருந்தாலும்,  பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இன்னும் நிறைய ரசிகர்களை சம்பாதித்து  வைத்திருக்கிறார் சாண்டி. 

இவர் சில தினங்களுக்கு முன், தனது இன்ஸ்டாகிராம் பக்கமான, iamsandy_off என்ற பக்கத்தில், புலி ஒன்றுடன் உறங்குவது போல புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் tag lineனாக “ தம்பிக்கு ஒடம்பு சரி இல்ல..அதான் அவன் கூடவே தூங்க சொல்லி அடம் பிடிக்கிறான்” எனவும் எழுதியிருந்தார். இதைப் பார்த்த பலரும் ஆச்சரியத்தில் வாயடைத்து போய், சராமாரியாக லைக்குகளை போட்டு வருகின்றனர். 

Photo by SANDY on January 25, 2020.

இதற்கு சிலரோ, காமடியாக, “ நல்ல வேளை தம்பிக்கு பசிக்கலை” என கமண்ட் போட்டுள்ளனர். கலைப்புலியான கமலை எளிதாக டீல் செய்த சாண்டி, இப்போது நிஜமான புலியையும் இலகுவாக டீல் செய்துவிட்டார் போல.

No comments

//]]>