Related posts

Breaking News

Actor Rajinikanth’s Opinion on Delhi Violent Activities

Actor Rajinikanth’s Opinion on Delhi Violent Activities 


டெல்லியில், புதிதாக கொண்டு வரப்பட்ட CAA சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடந்து வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த அவர்கள் சற்று முன்னர் அதனை பற்றி தனது கருத்தை பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்துள்ளார். இவர், CAA சட்டத்தினால், இஸ்லாமியர் எவரேனும் பாதிக்கப்பட்டால், முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது என்ன சொல்கிறார் நடிகர் ரஜினிகாந்த, விரிவாகப் பார்ப்போம்.டெல்லியில் பெரிய வன்முறை நடந்துள்ளதாகவும், இருபது பேர்வரை இதனால் இறந்திருக்கலாம் எனவும், இந்த போராட்டத்தை பற்றி உங்கள் கருத்து என்ன? என ஒரு பத்திரிகையாளர் கேட்க,  அதற்கு ரஜினிகாந்த், “டெல்லியில் நடக்கும் போராட்டங்கள் எல்லாமே, கண்டிப்பாக, மத்திய அரசின் intelligence பிரிவின் தோல்வியே, இதற்காக மத்திய அரசை நான் வன்மையாக கண்டிக்கிறேன், அதுவும், அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவிற்கு வருகை தந்திருக்கும் இது போன்ற வேளையில் மிகவும் ஜாக்கிரதையாக  இருந்திருக்க வேண்டும், intelligence பிரிவு, தனது வேலையை சரியாக செய்யவில்லை,அதை முழுமையாக இரும்புக்கரம் கொண்டு அவர்கள் அடக்கி இருக்க வேண்டும், இனிமேலாவது அவர்கள் கவனமாக இருப்பார்கள் என நான் எதிர்பார்க்கிறேன்” என்றவாறு அவர் பதிலளித்தார்.

மேலும் இன்னொரு பத்திரிகையாளர், நீங்கள் அரசியலை கூர்ந்து கவனிப்பவர், CAA சட்டத்தை வைத்து பலர் அரசியல் செய்கிறார்கள், மக்களை தவறான வழியில் தூண்டி விடுகிறார்கள். பிஜேபியின் கபில் ஷர்மா பேசிய பின்னர்தான், டெல்லியில் இந்த வன்முறையே நடந்துள்ளது. அப்படியிருக்கும் போது, டெல்லி தேர்தலிலும் நாம் பார்த்தோம், மதத்தை வைத்து எப்படி அரசியல் செய்யப்பட்டதென்று, ஆக மதத்தை வைத்து செய்யக்கூடிய இந்த புதிய அரசியலை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அதை எவ்வளவு வன்மையாக நீங்கள் கண்டிக்கிறீர்கள்?” என ரஜினிகாந்திடம் வினவினார்.


அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த் “இதை நான் ரொம்ப வன்மையாக கண்டிக்கிறேன், நான் முதலிலேயே சொன்ன மாதிரி சில பேர், சில கட்சிகள், சில மதங்களை வைத்து, சில மதத்தினரை வைத்து, அவர்கள் தூண்டுகோள் செய்து இதை பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இது சரியான போக்கே கிடையாது. இதை சென்ட்ரல் கவர்மண்ட் இரும்புக்கரம் கொண்டு அடக்கவில்லையென்றால் எதிர்காலத்தில் கஷ்டமாகிவிடும்” என்றார்.

“சேர் , மத்திய அமைச்சர்கள் “கோலி மரோ சாலோன் கோ” என பேசக்கூடிய ஒரு நடைமுறை வந்திருக்கு...” என பத்திரிகையாளர் கூறிய போது, “யாராவது, ஒரு சிலர் பேசினார்கள் என்பதற்காக எல்லோரின் மீது பழி செல்கிறது, ஆக மிக முக்கியமாக மக்கள், அதுவும் குறிப்பாக ஊடகங்கள்தான் இந்த மாதிரியான நிலையில் உறுதுணையாக, நியாத்தின் பக்கம் நிற்க வேண்டும்” என இருகரம் கூப்பி கோரிக்கை விடுத்தார். மேலும், இந்த சட்டம் திருப்பி வாங்கப்படும் என தான் நினைக்கவில்லையெனவும், இதற்காக என்ன போராட்டம் செய்தாலும், அதனால் பலன் கிடைக்கும் என தான் நம்பவில்லை எனவும், இதற்காக உடனேயே நான் பிஜேபியின் ஆள் என தன்னை சொல்ல வேண்டாம் என்றவாறும் கூறினார். இப்படி மூத்த பத்திரிகையாளர்களும், மூத்த பத்திரிகை விமர்சகர்களும் சொல்வதே தனக்கு வேதனையளிப்பதாகவும், தான் எது உண்மையோ, அதை மட்டுமே கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

“முஸ்லிம்கள் இதனால் குறி வைக்கப்படுகிறார்களா?” என இன்னொரு பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு, “இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும், இதை மிகக் கவனமாக மத்திய அரசும், மாநில அரசும் கையாள வேண்டும், இது என்னுடைய அன்பான வேண்டுகோள். 

மேலும் ஆங்கில பத்திரிகையாளர் ஒருவர், “as a upcoming politician, whose party is about to start?”உங்கள் கருத்து என்ன?” என கேட்டதற்கு, “anybody affected by CAA, I definitely stand by them” என்றார். மீண்டும் அவர், தமிழுக்கு பதிலாக இம்முறை ஆங்கிலத்தில் “with iron hands, இதை கண்டிப்பாக ஒடுக்கணும்” என்றார். மேலும், இது கண்டிப்பாக வன்முறை ஆகக் கூடாது, இன்டலிஜன்ஸ் இருப்பது எதற்கு?  ஆகவே, இதை வன்முறையாக ஆக விடக்கூடாது, இது எனது வேண்டுகோள்” என சொல்லிவிட்டு வணக்கம் தெரிவித்து விட்டு விடை பெற்றார் நடிகர் ரஜினிகாந்த். 

No comments

//]]>