Related posts

Breaking News

விரைவில் வருகிறது பட்ஜட் iPhone - புது ஃபோன் வாங்க போறீங்களா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க

iPhone , உண்மையை சொன்னால் பொதுவாக எல்லோருக்கும் ஐபோன் மீது ஒரு ஆவல் உள்ளது. நல்ல டிசைன்+தரம் என தொடர்ந்து 5,6 ஆண்டுகளுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் ஐபோன்களை பாவிக்க முடிவதுதான், இந்த ஆவலுக்கு காரணம். ஆனால்...அந்த ஆனால் என்னவெனில், விலைதான். 5,6 மீடியம் ரேஞ்ஜ் போன்கள் அல்லது 2 பைக்குகள் வாங்கும் விலைக்குதான் ஐபோனின் அதிகூடிய ப்ரீமியம் ரேஞ்ச் மோடல் இருக்கும். ஆனால்...இன்னுமொரு ஆனால், விதிவிலக்காக 2016ல், ஐபோன், SE என்ற மொடல் ஃபோனை வெளியிட்டது. இது இந்தியா போன்ற சந்தை பரப்பை குறி வைத்து வெளியிடப்பட்டதாலும், சாதாரண ஐபோன்களை விட விலை குறைவாக இருந்ததாலும் விற்பனையில் பாரிய இலாபம் ஈட்டியது.

ஐபோன் SE2 : உத்தேசிக்கப்பட்ட மாடல்
iPhone SEன் இரண்டாம் பதிப்பான iPhone SE 2 இந்த வருடம் (2020)ல் வெளி வரும் என இணைய வட்டாரங்களில் இருந்து வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றன. iPhone SE2வானது, iPhone 8ன் வடிவத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 4.7 இன்ச் அளவு கொண்ட டிஸ்ப்ளே கொண்டிருக்கும் இந்த போனில் ஆப்பிளின் புதிய ஃப்ரோசசரான A13 Bionic Chip பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பழைய ஐபோன் 8 மோடலிலேய புதிய சிப், பேட்டரி மற்றும் கேமராக்களை மாற்றி ஐபோன் SE 2 என்ற பெயரில் வெளியிடுவார்களா என பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

இந்த ஆண்டு மார்ச மாதம் நடைபெறும் ஆப்பிள் ஐபோன் வெளியீட்டு நிகழ்வில் இதுவும் வெளியிடப்படலாம். இந்த போன் வெளியிடப்பட்டால் சந்தைகளில் இன்னும் கம்மியான விலைக்கு மற்ற போன்கள் தங்களது தயாரிப்புக்களை வெளியிட தொடங்கிவிடும். ஆக, நீங்கள் ஐபோன் வாங்கவிட்டாலும் கூட வேறு ஏதாவது புது போன் வாங்கும் திட்டத்தில் இருந்தாலும், கொஞ்சம் பொறுமையாக காத்திருங்கள். 

No comments

//]]>