Related posts

Breaking News

Bigg Boss தர்ஷன் தன்னை ஏமாற்றியதாக புகார் அளித்த நடிகை சனம் ஷெட்டி


Bigg Boss போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் தனக்கென ஒரு தனி இடத்தைத் தக்க வைத்துக்கொண்டவர்தான் தர்ஷன். இன்றுமே, இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இவர் Bigg Boss போட்டியில் தோல்வியுற்ற போது, இவரது ரசிகர்கள், குறிப்பிட்ட டீ.வி சேனலுக்கு எதிராக, டிவிட்டரில் ஹாஷ்டேக்குகளை கிரியேட் செய்தது இன்னுமே மறக்க முடியாத சம்பவமாகும். இவருக்கும் நடிகை சனம் ஷெட்டிக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்ததும், அதில் ஏற்கனவே சில சில பிரச்சினைகள் இருந்ததும் ஊரறிந்த செய்திதான். அப்படியிருக்கையில், இன்று நடிகை சனம் ஷெட்டி, தர்ஷன் மீது, ஏமாற்றுதல், Threatening, Women Harassment, Breach of Trust என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இது பற்றி அவர் கூறிய கருத்துக்களை விரிவாகப் பாரப்போம். 

நடிகை சனம் ஷெட்டி பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் கூறியதன்படி, தனக்கும் பிக்பாஸ் தர்ஷனுக்கும் இடையில், 2019 மே மாதம் 12ம் திகதி கிட்டதட்ட 200 பேர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், போலவே அதே வருடம் ஜூன் மாதம் அவர்களது திருமண திகதி நிச்சயிக்கப்பட்டு இருந்ததாகவும், அந்த வேளையில் பிக்பாஸ் தரப்பினரிடமிருந்து அழைப்பு வரவே, அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் பொருட்டு, எங்கே திருமணம் செய்து கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றால் தனக்கு “பெண்களிடம் இருந்து வரவேற்பு கிடைக்காமல் போய்விடுமோ” என்ற அச்சத்தில் தனக்கு நிச்சயதார்த்தம் ஆனதை மறைத்து விட்டதாகவும், நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தவுடன் இதைப் பற்றி கருத்திற் கொள்வதாக தனக்கு வாக்களித்திருந்தார் எனவும் கூறினார். 


மேலும் அவர் தெரிவிக்கையில், தர்ஷனின் புகழ் கருதி, சனம் ஷெட்டியும் இது பற்றி வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என சத்தியம் செய்து இருந்தாகவும், அதனடிப்படையில் தான், சனம் இன்றுவரை வெளியே எதையும் சொல்லாமல் இருந்ததாகவும், பிக்பாஸ் நிகழ்ச்சி நடப்பதற்கு முன்னரும், தர்ஷனுக்காக கிட்ட தட்ட 15 இலட்சம் ரூபாய் வரை, நிதி ரீதியாக பங்களித்திருந்தாகவும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த நாள் முதல், தர்ஷன் தன்னோடு சரியாக முறையில் பழகுவதில்லை எனவும், தன்னை எல்லா இடத்திலுமே புறந்தள்ளி விடுவதாகவும், இது பற்றி ஏனைய பிக்பாஸ் போட்டியாளர்களான சாண்டி மற்று முகினிடமும் கூட கலந்தோசித்ததாகவும், அதே வேளை இதற்காக தர்ஷனின் பெற்றோரை பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் வரை சென்றதாகவும், அங்கு சென்றும் பெரிய பலன் கிடைக்கவில்லை எனவும், நடிகை சனம் ஷெட்டி மிகவும் வேதனையோடு  குறிப்பிடுகிறார். 

இருப்பினும் சென்னை வந்த பின்னரும் தர்ஷனை கன்வின்ஸ் செய்ய முயற்சி செய்தும், உடனடியாக திருமணம் செய்ய தேவையில்லை, ஆறு மாதங்கள் கழித்து கூட திருமணம் செய்து கொள்ளலாம் என சனம் கூறியதையும் தர்ஷன் ஏற்கவில்லை எனவும் தெரிவிக்கிறார் சனம் ஷெட்டி. சனம் ஷெட்டி ஒரு நடிகை என்பதால்தான் அவரை இவ்வாறு புறந்தள்ளுகிறாராம் தர்ஷன், ஆனால் சனம் ஷெட்டி நடிகை என தெரிந்துதான் அவரை தர்ஷன் காதலித்திருந்தார் என்பது தனிக்கதை. மேலும் தர்ஷன் தன்னை மென்டல் ஹாராஸ்மண்ட் செய்வதாகவும் தன்னை பயமுறுத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார் சனம். ஆகவே மேற் கொண்ட காரணங்களுக்காக தர்ஷன் மீது ஏமாற்றுதல், Threatening, Women Harassment, Breach of Trust என பல தரப்பட்ட பிரிவுகளின் கீழ், கமிஷ்னர் அலுவலகத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளாராம் சனம். தர்ஷனுக்கு, பிக்பாஸ் போட்டிக்கு செல்ல அப்ளிகேஷன் அளித்ததே சனம் ஷெட்டிதானாம். வனிதா கூட அடிக்கடி தர்ஷன் நடிக்கிறான் என சொல்வதும் இதனால்தானோ என்னவோ? 

தர்ஷன் இப்படிப்பட்டவரா என அவர்களது ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். தர்ஷன் செய்தது சரியா? தவறா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 

No comments

//]]>