Related posts

Breaking News

நயன்தாரா வெற்றி பெறுவதன் ரகசியம் என்ன

விந்தையான சென்னை

சென்னை, கோடம்பாக்கமானது பல நடிகர், நடிகைகளை சந்தித்துள்ளது. அதில் சிலரை வாழவைத்ததும் சென்னைதான், அதேவேளை பலரை காவுக் கொண்டதும் அதே சென்னை கோடம்பாக்கம்தான். நடிகர்களாவது தத்தித்தாவி புகழேணியல் ஏறிவிட்டார்களெனில் குறைந்தது பத்து வருடங்களுக்கு மேல் இன்டஸ்ட்ரியில் நிலைத்து விடுவார்கள். அதேவேளை, 20,30,40 ஏன் 50 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில், தனது “ஹீரோ” என்ற அந்தஸ்த்தை விட்டு கொடுக்கமால் வெற்றிகரமாக பயணம் செய்து கொண்டிருக்கும் மூ(மு)த்தக் கலைஞர்களையும் (நடிகர் விவேக் ஒரு முறை கமலஹாசனை இப்படித்தான் விளித்தார்) நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். 

ஆனால், நடிகைகளின் நிலைமை முற்றிலும் வேறு. தமிழில் அந்த காலம் தொட்டு விரல் விட்டு எண்ணும் அளவு நடிகைகளே கதாநாயகியாக பத்து ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்து வந்துருகின்றனர். உடற் பருமன், திருமணத்தின் பின் வரும் தடை, இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர்கள் தரும் தொல்லைகள் என பல காரணங்கள் இவர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றன.இளம் கதாநாயகியாக ஆரம்பித்து அக்கா கதாபாத்திரம், அம்மா கதாபாத்திரம் என உடனடி ப்ரமோஷன்களை பெறுவர்களே அதிகம். 

நடிகை நயன்தாரா

இதில் நடிகை நயன்தாராவும் அவர்கள் இளம் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் உச்ச நட்சத்திரமாகி சில பல பிரச்சினைகளால் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டே வெளியேறி விட்டார். அதன்பின், ராஜா ராணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ-எண்ட்ரியானவர், தனக்குரிய சரியான ஒரு நபரையும் கண்டுபிடித்தானதன் பின்னே முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டு அதில் தொடர்ந்தும் கட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறார். 

2019ல் மட்டுமே எட்டு திரைப்படங்களில் நடித்துள்ளார் நயன்தாரா. அதில் விஸ்வாசம், ஐரா, மிஸ்டர்.லோக்கல், கொலையுதிர்காலம் மற்றும் பிகில் என ஐந்து தமிழ் திரைப்படங்கள் உள்ளடங்குகின்றன. ஐரா, மிஸ்டர்.லோக்கல், கொலையுதிர்காலம் ஆகியன தோற்றாலும் கூட தல அஜித்தின் விஸ்வாசமும் தளபதி விஜயின் பிகிலும் பெரும் வெற்றி பெற்றது. மேலும் தெலுங்கு படமான சியா ரா நரசிம்மா ரெட்டி திரைப்படமும் இவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. இக்காரணங்களால் இவரது மார்க்கட் மேலும் உச்சத்துக்கு ஏற ஆரம்பித்தது. இந்த பொங்கலுக்கு வரவிருக்கின்ற சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் தர்பார் படத்திலும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராதான் நடிக்கிறார் என்பதால், இந்த ஆண்டும் இவரே நம்பர்.1னாக தொடரலாம் என எதிர்பார்க்கலாம். ஆக, இந்த கட்டுரை எழுதப்பட்டதன் உள்நோக்கம் யாதெனில், நீங்கள் நல்ல திறமைசாலியாக, உச்சத்தில் கொடிகட்டிப் பறந்தாலும், கூடாத நபர்களின் சகவாசமும் உங்களுக்கு பொருத்தமற்ற வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதும் உங்களை பாதாளத்திற்கு இழுத்துக் கொண்டுவிடும். அதே வேளை, நீங்கள் சரியான நபர்களிடம் பழகி உங்களுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பீர்களாயின், நீங்கள் எந்த பாதாளத்தில் இருந்தாலும் மேலே, உயரே, உச்சியிலே கொடிகட்டிப் பறக்கலாம் என்பதை உணர்த்துவதுதான் ஆக படங்கள் ஹிட்டானது மட்டுமே இவரது நம்பர் 1 இடத்துக்கு காரணமல்ல. “அமைஞ்சா அது போல கல்யாணம் பண்ணு, இல்ல நீ வாழு தனி ஆளா நின்னு” 

Happy New Year 2020 Folks 

No comments

//]]>