Related posts

Breaking News

குறைந்த விலையில் நல்ல ஸ்மார்ட் ஃபோன்- வந்து விட்டது Redmi K30



Poco F1, Redmi K20 என அடுத்தடுத்து நல்ல value for money மொபைல்களை வெளியிட்டு வரும் xiaomi நிறுவனத்தின் புதிய வெளியீடுதான் Redmi K30. இப்போதைக்கு இது சீனாவில் மாத்திரமே வெளியிடப்பட்டுள்ள நிலையில்கூடிய விரைவில் இது இந்தியஇலங்கை சந்தைகளுக்கு வரக்கூடும்இப்போதுஇந்த மொபைலின் டிசைன் மற்றும் specifications ஆகியவற்றை பார்ப்போம்முதலில் இது மூன்று வேரியண்டிகளில் வருகிறதுஅவையாவன; 6GB Ram 64GB, 6GB Ram 128GB மற்றும் 8GB Ram 128GB.

இந்த மொடல் தொலைபேசிகள் குறைந்த விலையில் 5Gயையும் அறிமுகப்படுத்துகின்றனகவனிக்கஇந்தியா போன்ற நாடுகளில் 5G அற்ற மொடல்களே விற்பனைக்கு வரவிருப்பதாக தெரிகிறதுமேலும் K20யில் இருந்த Amoled டிஸ்ப்ளே இதில் இல்லைஇதில் LCD டிஸ்ப்ளேயே பயன்படுத்தப்பட்டுள்ளதுஆனால் 120 refresh ratesயை கொண்டுள்ளது K30. மொபைலின் தோற்றத்தை பொருத்தவரை, K20 போலல்லாது டிசைனை சிம்பிளாக உள்ளதுநீலம்சிவப்புஊதா மற்றும் வெள்ளை நிறங்களில் மொபைல் கிடைகிறது27w fast charger பொக்ஸிலேயே உங்களுக்கு கிடைப்பதால் தனியாக அதை தேடி வாங்க வேண்டிய அவதிஇல்லை. 4500 mah கொண்ட இதன் பேட்டரி 0-100 கிட்டதட்ட 70 நிமிடங்களில் சார்ஜ் ஆகி விடுகிறதாம்ஆன்ராய்டின் 10ம் பதிப்பில் இயங்கும் MIUI11 கொண்ட K30 Snapdragon 765G processor வலுவூட்டுகிறது.  765G Processorரானது கேம் விளையாடுவதை கருத்திற் கொண்டு வடிவமைக்கப்பட்ட 7 நனோ மீட்டர் சிப்பாகும்.

பின்புறம் நான்கு கேமராக்களும் முன் பக்கம் இரண்டு கேமராக்களையும் கொண்டுள்ளது K30. 64 மெகா பிக்‌ஸல் main கேமரா, 8 மெகா பிக்‌ஸல் ultra wide, 2 மெகா பிக்‌ஸல் மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகா பிக்‌ஸல் depth சென்சார் கேமரா ஆகியன பின்பக்கம் உள்ளனமுன் பக்கத்தில் 20 மெகா பிக்ஸல் செல்ஃபி கேமரா மற்றும் 2 மெகா பிக்ஸல் டெப்த் சென்சார் கேமராவும் உள்ளன



நல்ல ஸ்பீக்கர்களை கொண்டுள்ள இம்மொபைலில் 3.5mm ஹெட்போன் ஜாக்கும் உள்ளதுமேலும், finger print + face unlock இரண்டுமே இதில் உள்ளனஇந்திய மதிப்பில் 16000 ரூபாய் வரையும் இலங்கை மதிப்பில் 40000+Tax விலை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறதுகவனிக்கஇறுதி விலை பல்வேறு காரணிகளின் அடிப்படையில் கூடிக் குறையவாய்ப்புள்ளது

No comments

//]]>