Related posts

Breaking News

வெளியானது தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் first look poster



லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் first look poster இன்று  வெளியிடப்பட்டது. தளபதியின் 64வது படமான இதற்கு மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது.   இதில் விஜய் சேதுபதி உட்பட சாந்தனு பாக்கியராஜ், மாளவிகா மற்றும் ஆண்ட்ரியா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ், மாநகரம் மற்றும் கைதி என்னும் வெற்றி திரைப்படங்களுக்கு சொந்தக்காரர். அடுத்தடுத்து இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து வருபவர் தளபதி விஜய். அட்லீக்கும் அவ்வாறுதான் தெறியில் வாய்ப்பளித்தார். அதைப்போலவே இப்பொழுதும் லோகேஷுக்கு வாய்ப்பளித்துள்ளார்.



Blurரான தன்மையில் இருக்கும் இந்த போஸ்டரை உற்று கவனித்தால், யாரோ தளபதியிடம் செமத்தையாக அடி வாங்கி விட்டு கலங்கிய கண்களுடன் தளபதியை பார்ப்பது போல் உள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படமானது வரும் வருடத்தின் கோடை காலத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

3 comments

Master said...

I want to know the release date of Master movie from Thalabathy

Kavind Jeeva said...

Release Date Maybe 9th April 2020 Nanba

Master Tamilrockers said...

Master vijay movie first look is very nice.

//]]>