Related posts

Breaking News

Darbar Motion Poster released : சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகும் ரஜினிகாந்த்



இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிக்கும் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் சற்றுமுன் வெளியிடப்பட்டது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஸ்டைலிஷ் ஒளிப்பதிவிற்கு பேர்போன சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். 

இப்படத்தின் தமிழ் மோஷன் போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட, ஹிந்தியில் சல்மான்கான் வெளியிட்டார். மேலும் தெலுங்கு மோஷன் போஸ்டரை மகேஷ் பாபுவும் மலையாளத்தில் மோகன் லாலும் வெளியிட்டுள்ளனர். 

அனிருத் இசை பிண்னனியில் ஒளிக்கிறது. பேட்ட படத்தின் தீம் மியூசிக்கிற்கும் தர்பார் தீமுக்கும் ஆறு வித்தியாசங்களை கூட கண்டுப்பிடிக்க முடியவில்லை. போகப் போக கேட்டு பழகிக் கொள்ள வேண்டும் போல.

லைகா நிறுவனத்திற்கு 2.0 சரியாக போகாததால் அதே நிறுவனத்திற்கு இந்த படத்தை செய்து கொடுக்கிறாராம் ரஜினிகாந்த். இந்த வயதிலும் அதே ஸ்டைலுடன் இருக்கிறார் சூப்பர் ஸ்டார். இந்த படத்தில் அவர் போலிஸாக நடிக்கிறார் என்ற வதந்தி பரவி வந்த நிலையில் மோஷன் போஸ்டர் அதை உறுதி செய்துள்ளது. தர்பார் திரைப்படம் பொங்களுக்கு ரீலிஸாக உள்ள நிலையில் இன்று வெளிவந்த இந்த மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


2 comments

Darbar said...

Darbar movie will be the highiest collection movie in 2020

Kavind Jeeva said...

வாழ்த்துக்கள்

//]]>