Related posts

Breaking News

பிகில் திரைப்படத்திற்கு வந்த சோதனைகடந்த தீபாவளி அன்று ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது நடிகர் விஜய் அவர்களின் பிகில் திரைப்படம். இத்திரைப்படம் வெளியாகும் முன்பே ‘ கதை திருட்டு ‘ பிரச்சினையில் சிக்கியது அனைவரும் அறிந்ததே. பின்னர், ஒருவாறாக படத்தை ரிலீஸ் செய்த போதும், ஒரு சில முதிர்சியற்ற விஜய் ரசிகர்களின் கேவலமான நடவடிக்கைகள், வெளியான அன்றே படத்திற்கு அவப் பெயரை வாங்கிக் கொடுத்தது. காரணம், அதிகாலை காட்சியை முன் கூட்டியே வெளியிடச் சொல்லி பல தளபதி “புள்ளைங்கோ” நடு வீதிக்கு வந்து அங்கிருந்த தனியார் மற்றும் அரச சொத்துக்களை சேதமாக்கினர். இதனால், ஆர்பாட்டமில்லாமல் படம் பார்க்க வந்த தளபதி ரசிகர்ளும் பாதிக்கப்பட்டனர். இறுதியில், 32 பேர் கைது செய்யப்பட்டனர், அதில் கிட்டத்தட்ட 12 பேர் 18 வயதை தாண்டாத சிறுவர்களும் அடங்குவர். சிறுவர்கள் சீர்த்திருத்த பள்ளிக்கும், ஏனையவர்கள் சிறைக்கூடத்திற்கும் அனுப்பப்பட கடைசியில் ஜாமீனுக்காக அலைவது என்னவோ பெற்றோர்கள்தான்.

இது ஒரு புறம் நடக்க, இன்னொரு புறம், பிகில் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டால் அமைச்சர் ‘கடம்பூர்’ ராஜூவுக்கு மாவுக் கட்டு போடுவேன் என ஒரு ரசிகர் பகிரங்கமாக தியேட்டர் வாசிலில் நின்று பேட்டியளிக்க, அது இணையம் வழியே செய்திகளில் வரத் தொடங்கியது. கடைசியில் அந்த ரசிகர் பயத்தில் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டார். இப்படி பல குழறுபடிகளின் மத்தியில் படம் வெளியானது. வெளியான சற்று நேரத்திலேயே, சில நேர்மையான விஜய் ரசிகர்களே படத்தின் மீதும் அட்லியையும் மீதும் அதிருப்தி கொள்ள தொடங்கிவிட்டனர். காரணம், கதை மட்டுமல்லாது காட்சிகளும் கூட ஏனைய படங்களில் இருந்து நகலெடுக்கப்பட்டிருந்தே. வெளிநாட்டு படங்களில் இருந்து காப்பியடித்திருந்தால் கூட உடனேயே ரசிகர்கள் கொத்தளித்திருக்க மாட்டார்கள். ஆனால் பிரபல தமிழ் மற்றும் இந்திய படங்களான ‘அரசு’ , ‘கனா’, ‘சக்தே இந்தியா’ மற்றும் இன்னும் பல திரைப்படங்களின் காட்சிகள் இருந்ததால் ‘டக்’கென்று அட்லி மாட்டிக்கொண்டார்.

A meme shared in social media by Fans

இருக்கும் சிக்கல்கள் போதாதென்று, கார்த்தியின் ‘கைதி’ திரைப்படமும் வெளிவந்து, நல்ல வரேவேற்பை மக்களிடையே பெற்றது. இதனால் ‘பிகில்’ படத்தின் வசூலும் அடிவாங்க தொடங்கியது. இதன் காரணமாக பிரபல திரையரங்குகளில் கூட இப்போது பிகில் படம் பார்க்க ஆளில்லாமல் போனது, மேலும் ‘தேவி’ போன்ற தியேட்டர்கள் ஆளில்லாத காரணத்தால் படத்தை சிறிய திரைகளுக்கு மாற்றியது. இதேவேளை, ஆரம்பத்தில் ‘பிகில்’ திரைப்பட வெளியீட்டால் தியேட்டர்கள் போதியளவு கிடைக்காத ‘கைதி’ படத்தை பல தியேட்டர் உரிமையாளர்களும் கேட்டு வாங்கி திரையிட்டனர்.

எவ்வளவு பெரிய நடிகர் நடித்தாலும் படம் நன்றாக இல்லையென்றால், எத்தனை ரூபாய்க்கு மார்க்கடிங் செய்தாலும் பிரயோசனமில்லை என்பதை இது காட்டும் அதேவேளை, திரைப்படத்தை திரைப்படமாக மட்டுமே பார்க்க வேண்டும், அதனை ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொண்டால் அவரவர் வாழ்க்கைக்குதான் சிக்கல் என்பதையும் இது வெளிச்சம் போட்டு காட்டுகிறது. விஜய் ரசிகர்கள் என்ற பெயரில் பொறுபற்ற செயல்களை செய்பவர்களாலும் இயக்குனர் என்ற போர்வையில் காப்பி, பேஸ்ட் செய்பவர்களாலும் யாருக்கு எல்லாம் நட்டம் என யோசியுங்கள்.    முதலில் படம் எடுத்த தயாரிப்பாளர், அடுத்து 25 வருடங்களுக்கு மேல் பல படங்களில் தனது தனித்திறமையால் நல்ல பெயரை வாங்கியிருக்கும் நடிகர் விஜய் அவர்களின் பெயரை சொல்லியே இத்தனை செய்திகளும் வெளிவருகிறது. அவருக்கு இருக்கும் நற்பெயருக்கும் இது கலங்கமே. இதில் அதிக பாதிப்பு யாருக்கு எனில், பெற்றோருக்கும் பொது மக்களுக்குமே. வைரஸ் நோய் போல இந்த மாதிரியான நோய்கள் இப்போதுள்ள இளைஞர்கள் மத்தியில் பரவிவருகிறது.  இன்றைய சூழலில் தயாரிப்பாளர்கள் பலரும் படம் எடுத்து நட்டப்பட்டு வருகின்றனர். அதனால் பட புரமோஷனுக்காக பலவற்றையும் சொல்கின்றனர், செய்கின்றனர். அதை நாம் நமது வாழ்க்கைகுள் புகுத்தி கொள்ளாமல் இருப்பதே சாலச் சிறந்தது.

No comments

//]]>