Related posts

Breaking News

லாலாவுடன் "வெறித்தனம்" பாடலுக்கு நடனமாடிய சேண்டி




பிக் பாஸ் சீசன் 3யானது கோலாகலமாக நடந்து முடிந்தது. இதில் முகின் வெற்றியை சூட சேண்டி runner up ஆக தேர்வு செய்யப்பட்டார். இதில் சேண்டி தனது செல்ல மகளை பிரிந்திருக்கும் வேதனை பற்றி பலமுறை நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருந்தார். இப்போது போட்டி முடிந்து வெளியே வந்த சேண்டி, தனது மாணவர்கள் மற்றும் தனது லாலாவுடன் சேர்ந்து "வெறித்தனம்" பாடலுக்கு வெறித்தனமாக நடனமாடியுள்ளார். நடனமாடிய பின்னர் சேண்டி மக்களுக்கு தனது அன்பை பகிர்ந்து கொண்டார். அதன் போது இவர், தன்னை இறுதிப் போட்டிவரை கொண்டு வந்து அன்பை பகிர்ந்து கொண்டதற்கு நன்றியையும் 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து மக்களை மகிழ்வித்தது  போல வெளியில் வந்தும் தான் மக்களை மகிழ்விப்பேன், மேலும் அதற்கு தான் தயாராக இருப்பதாகவும் அதற்கான வாய்ப்புகளும் தன்னை தேடி வந்து கொண்டு இருக்கிறன எனவும் கூறியுள்ளார். 




ஏற்கனவே இந்த பாடலுக்கு இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதும் நடனமாடியது குறிப்பிடத்தக்கது.

No comments

//]]>