Related posts

Breaking News

முகினின் இந்த பாடல் உங்களுக்கும் பிடிச்சிருக்கா?



பிக் பாஸ் சீசன் 3யானது அதன் இறுதிக்கட்டடத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரு வாரக் காலப் பகுதிக்குள் இந்நிகழ்ச்சியானது முடிவடைய இருக்கும் வேலையில் நேற்றைய பிக் பாஸில் சூப்பர் சிங்கர்  சௌந்தர்யா மற்றும் பிரியங்கா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதன் போது முகினுடன் சேர்ந்து இவர்கள் பாடல்களை  பாடி ஹவுஸ்மேட்ஸை  மகிழ்வித்தனர். முகின் தனது சொந்தப் பாடலான " நீதான் நீதான் நீதாண்டி எனக்குள்ள..... " என்னும் பாடலை தன்னுடைய சொந்தக்குரலில்  தனக்கேயுரிய பாணியில் பாடி அசத்தினார். ஏற்கனவே இந்த பாடலை அவருடைய குரலின் வழியாக ரசிகர்கள் கேட்டிருந்தாலும், நேற்றைய நாளில் இசைக் குழுவினரின் பின்ணனி இசையுடன் இவர் பாடியபோது, அங்கிருந்தவர்கள் மட்டுமல்லாது வெளியே இருக்கும் அவர்களது ரசிகர்களும் இந்த பாடலை மெய் மறந்து ரசித்தனர். 




தேர்ந்த இசையமைப்பாளர் போல இசையமைத்து தன் குரலிலேயே பாடல் பாடும் இவரது திறனை பலரும் வியந்து வருகின்றனர். ஏற்கனவே இவர் பாடிய "We are the boysu" என்ற பாடலை முகினின் நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு பாடலாக வடிவமைத்து Youtubeல் வெளியிட்டருந்தது குறிப்பிடத்தக்கது. நீங்களும் முகினின் பாடலை ரசித்தீர்களா? அந்தப் பாடலைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன ?  





No comments

//]]>