Related posts

Breaking News

பிக்பாஸ் சீசன் 3 டைட்டிலை "தட்டித் தூக்கினார்" முகின்



பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியானது 100 நாட்களை கடந்து நடந்து வருகிறது. தர்ஷன் வெளியேறியதும் நிகழ்ச்சியைப் பற்றி பல அதிருப்திகள் எழுந்தாலுமே, இறுதியில் யார் வெற்றி வாகை சூடப்போகிறார்கள் என்ற ஆர்வம் மக்களிடையே குறையவில்லை.

பல்வேறு கலை நிகழ்வுகளுடன் கோலாகலமாக நடந்தேறியது பிக்பாஸ் சீசன் 3. மக்கள் பார்க்கக்கூடிய வண்ணம் அபிராமியும் யாஷிகாவும் பார்க்க முடியாதவாறு கஸ்தூரி மற்றும் வனிதா ஆகியோரும் தமது நடன வித்தைகளை மேடையில் காட்டினர். 

பின்னர் கலக்கப்போவது யாரு அணியின் பிக்பாஸ் Spoof ரசிக்கும்படியாக இருந்தது.
அதன்பின், பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு சில விருதுகள் வழங்கப்பட்டது. இதில் Guts and Grits விருது வனிதாவுக்கும், Game Changer விருது கவினுக்கும் Most Decepline Person விருது சேரனுக்கும் வழங்கப்பட்டது. All Rounderaக தர்ஷன் தேர்ந்தெடுக்ப்பட்டார். மேலும் கமல் அவருக்கு "ராஜ் கமல் இன்டர்நேஷனல்" என்னும் தனது பேனரின் கீழ் நடிக்க வாய்ப்பு வழங்கினார். ஒருவேளை ஷூட்டிங் காரணங்களுக்காக கூட தர்ஷன் சீக்கிரமாக வெளியேறி இருக்கலாம்.

முதலாவதாக வெள்யேற்றப்பட்ட ஷெரின் பெஸ்ட் படியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்ற வாரமே இவர் வெளியேற்றப்பட்டிருந்தால் இத்தனை பிரச்சினைகள் எழுந்திருக்காது. பின்னர்
 எதிர்பாரா வண்ணம் ஸ்ருதி ஹாசன் மேடையை அலங்கரித்து பின்னர் பிக்பாஸ் வீட்டினுள் சென்றார். அவரிடம் ஒரு கார்ட் கொடுக்கப்பட்டது. அதில் அடுத்து வெளியேறும் போட்டிளாளரின் பெயர் இருந்தது. அது வேறு யாரும் இல்லை லொஸ்லியா தான். 

பின்னர் சாண்டியும் முகினும் மட்டுமே வீட்டினுள் இருந்தனர். இதில் குறிப்பிடும்படியாக பிக்பாஸ் " மிஸ் யு சிஸ்யாஸ்" என்றவாறு இருவரையும் வழியனுப்பி வைக்க, மேடைக்கு சென்ற இருவரையும் கமல் வர வேற்றார்.

கொஞ்சம் சஸ்பென்ஸிற்கு பின், யார் வெற்றியாளர் என்பதை கமல் அறிவிக்க அரங்கமே அதிர்ந்தது. அந்த பெயர்தான் 'முகின் ராவ்' என்கிற MGR. தர்ஷன் வெளியேறினால் இவர்தான் அடுத்து வெற்றி பெற தகுதியானவர் என பலரும் கூற அதற்கேற்போல வெற்றிப்பெற்றுள்ளார் முகின் ராவ். மேலும் முகின் தனது வெற்றி மேடையை தர்ஷனுடன் பகிர்ந்து கொண்டார்.

இவ்வாறாக 106 நாட்கள் கொண்ட இந்த  பயணம் பல மேடு பள்ளங்களை சந்தித்த பின் இனிதே முடிவடைந்தது. முகின் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது சரிதானா? உங்கள் கருத்து என்ன? பிக்பாஸ் மூலம் நீங்கள் கற்றது என்ன?

No comments

//]]>