Related posts

Breaking News

அடுத்த பலியாடு முகினா?


பிக்பாஸ் சீசன் 3 அதன் இறுதிக்கட்டத்தை எட்டயுள்ள நிலையில், வெற்றிப்பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் நேற்று இறுதி நேரத்தில் வெளியேற்றப்பட்டார். இவரது வெளியேற்றத்தினால் பெரிதும் அதிருப்தியான ரசிகர்கள் நேற்று குறிப்பிட்ட நிறுவனத்திற்கு எதிராக ஹாஸ்டேக் ஒன்றையும் டிரண்ட் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதைப்போலவே, இப்போது வெளியிடப்பட்ட ப்ரோமோக்களை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது, அடுத்து இலக்கு முகினாக இருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது.

காரணம், முகின்தான் இந்தவாரம் மிகவும் ஹைலைட் செய்யப்படுகிறார். எலிமினேட் செய்யப்படுவதறக்கு முன் தர்ஷன் ராஜாவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தர்ஷன் இல்லாவிட்டால் முகின்தான் வெற்றி பெறுவார் என்னும் கருத்து நிலவுவதால் அவருக்கு வெற்றியைக் கொடுக்க மாட்டார்கள் என தெரிகிறது. அதாவது மக்களை வாக்களிக்க சொன்னாலும், மக்களால் அதிக ஆதரவைப் பெற்றவர்களுக்கு வெற்றிக்கிடைப்பதில்லை என்ற கருத்து நிலவி வருகிறது. போலவே கோல்டன் டிக்கட் வென்றவர்கள் டைட்டில வென்றதில்லை என்னும் கருத்து நிலவுவதாலும் இந்த முறையும் அதே போல் நடக்கும் என தெரிகிறது.

இன்னொரு பக்கம் சாண்டிதான் வெற்றி பெறுவார் என பலரும் ஏனைய இரண்டு சீசன்களை அடிப்படையாக வைத்து தங்களது அனுமானங்களை கூறுகின்றனர். ஏனெனில் இந்திய தமிழர் ஒருவருக்கே எப்படியும் டைட்டில் கொடுக்கப்படும் என்ற அனுமானத்தை போன சீசன்களை தொடர்ச்சியாக பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

முகின் வெல்வாரா? அல்லது யார் வெற்றிப்பெறுவார்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

1 comment

Unknown said...

Unmliyaga erukalam.... miss you tharshan anna ....

//]]>