Related posts

Breaking News

தர்ஷன் முதுகில் குத்தப்பட்டாரா?


Bigg Boss நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இன்று கடைசியான Elimination நடைபெற்றது. இதில் வெளியேற்றப்படுபவர் தவிர்ந்த ஏனைய நால்வரும் இறுதிச்சுற்றிற்கு செல்வர். ஆகவே, இப்போட்டியில் இப்போது எஞ்சியிருக்கும் போட்டியாளர்கள் முகின், தர்ஷன், லொஸ்லியா, ஷெரின் மற்றும் சேண்டி ஆகியோரே.

இதில் முகின் ஏற்கனேவே Golden Ticket எனப்படும் நுழைவாயில் வழியாக ஏற்கனேவே இறுதிச்சுற்றிற்கு தகுதிப்பெற்று விட, ஏனைய நால்வரும் வெளியேறுவதற்காக நாமினேட் செய்யப்பட்டிருந்தார்கள். இதில் இந்தவாரம் ஷெரின் அல்லது லொஸ்லியா வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனைவரும் எதிர்பாரா வண்ணம் இலங்கையைச் சேர்ந்த தர்ஷன் வெளியேற்றப்பட்டுள்ளார்.

இப்போட்டியில் தொடக்கம் முதலே நன்றாக விளையாடி மக்களின் ஆதரவை பெறுபவர்கள் ஏதேனும் ஒரு முறையில் வெளியேற்றப்பட்டே வருகின்றனர். குறிப்பாக, முதலில் மதுமிதா. சிறப்பாக இவர் விளையாடினாலுமே வீட்டின் சக போட்டியாளர்கள் செய்த செயலால் மன உளைச்சலுக்கு ஆளாகி தன்னை தானே காயப்படுத்திக் கொண்டு போட்டியிலிருந்து வெளியேறினார். ஆனால் தவறாக நடந்து கொண்டவர்கள் மீது நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

போலவே இயக்குனர் திரு.சேரன் அவர்கள், இளவயது போட்டியாளர்களை விட நன்றாக விளையாடிய இவர் மக்கள் ஆதரவு இருந்த போதும் வெளியேற்றப்பட்டார். பின்னர் ரகசிய அறை என சில நாட்கள் TRPக்காக இவரை உள்ளே வைத்து விட்டு மீண்டும் வெளியே அனுப்பினார்கள்.

அதைப்போலவே, பிக்பாஸ் டைட்டிலை வெல்ல சகல வகையிலும் பொருந்தமுள்ள நபர்தான் தர்ஷன். ஏற்கனவே, சைக்கிள் ஓட்டும் டாஸ்கில், இவர் தொடர்சியாக 8 மணிநேரம் சைக்கிள் ஓடி வெற்றிபெற அந்த புள்ளிகள் முகினுக்கானது என கூறப்பட்டு கொடுக்கப்பட முகின் Golden Ticket வென்றார். ஒருவேளை கவினின் புள்ளிகளை முகினுக்கு கொடுத்திருந்தால் தர்ஷனே வெற்றிப்பெற்றிப்பார்.

மேலும் கார் விளம்பரத்திற்கான டாஸ்கில் முகினும் தர்ஷனும் ஏதோ சொல்லி சிரித்து கொண்டதையும் மக்கள் பார்த்திருக்கலாம். அதைப்போலவே, இலங்கையில் இருந்து வந்த இரண்டு போட்டியாளர்களையும் இறுதிப்போட்டிக்கு அனுப்பவதால் இப்போட்டியை நடத்தும் நிறுவனம் இலங்கை என்னும் ஒரு சந்தையில் இரு முதலீடுகளை செய்யும். இது குறிப்பிட்ட நிறுவனத்திற்கு வர்த்தக அடிப்படையில் தேவையற்ற ஒன்று. முகின் மலேசியாவையும் ஷெரின் அண்டை மாநிலமான கர்நடாகாவையும் சேண்டி தமிழ்நாட்டையும் கவர் செய்கிறார்கள். ஆக இலங்கையில் உள்ள நேயர்களை நிகழ்ச்சியை பார்க்க வைப்பதற்கு இதில் யாரேனும் ஒருவரே போதும்.

இதில் லொஸ்லியா இளவயது பெண் என்பதால் கண்டிப்பாக இப்போட்டியை பலர் பார்ப்பார்கள். வெறும் தோற்றத்திற்காகவே முதல் நாளிலேயே அவருக்கு ரசிகர் படை வேறு அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக தர்ஷனை தேவை தீர்ந்ததும் கடதாசி போல தூக்கியெறிந்திருக்கலாம்.

எனினும் தர்ஷன் இப்போது வெளியேறினால் அவர் வெளியில் நல்ல பெயருடன் வந்து தன்னிச்சையாக செயற்பட்டு நல்ல எதிர்காலத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளது. டைட்டில் வென்றால் குண்டு சண்டிக்குள் குதிரை ஓட்ட வேண்டிய நிலை வரலாம்.

நமது கணிப்புப்படி, இறுதிச்சுற்றில் லொஸ்லியா அல்லது சேண்டிக்கு வெற்றியை பெற்றுக்கொடுக்க வாய்ப்புள்ளது. முகினின் வெற்றியும் சற்று சந்தேகம்தான்.

தர்ஷன் வெளியேறுவது பற்றி உங்கள் கருத்து என்ன? உலகில் உண்மையாக கஷ்டப்பட்டு திறமையை காட்டும் சேரனை போல அல்லது தர்ஷனைப்போல நீங்களும் தகுதி இருந்தும் வாய்ப்புக்களை இழந்திருக்கிறீர்களா?

1 comment

Unknown said...

Yes vijay tv and kamal seiyatha pachsa thoorogam ethy tharshanukku

//]]>