Related posts

Breaking News

பிக்பாஸ் வீட்டை விட்டு போக தயாரான கவின் (Bigg Boss Tamil Season 3- Day 94)



காலையிலையே " 16 people come this home..." என ஸ்துதி பாடி அரசர் தர்ஷனை எழுப்புகிறார்கள் மற்ற ஹவுஸ் மேட்ஸ்கள். எல்லோரும் பாட கவின் மட்டும் டூத்பிரஷை வைத்து பல்தேய்த்து கொண்டிருந்தார்.

"அவர் மட்டும் ஸ்துதி பாடவில்லையே" என தர்ஷன் கேட்க,

"அவன் வாண்ட்டாக வாயில் குச்சியை வைத்துக் கொண்டுள்ளான், அது பவர் பாட்டியின் குச்சி" என சாண்டி பதில் சொல்ல ஆரம்பமே கலகலப்பாக தொடங்கியது இன்றைய ஷோ.



பிறகு ஷெரின் நேற்று எழுதிய லெட்டரை கிழித்து வைத்திந்திருக்க, அதை இன்று பாஸ்கட்டில் வீசினார். அதை கண்டு விட்ட முகினும் தர்ஷனும், ஷெரின் மெதுவாக அங்கிருந்து சென்றவுடன் அந்த கிழிந்த பேப்பர் துண்டுகளை ஒன்றாக்கி ஒட்ட வைத்து அதை படிக்கிறார்கள்.



ஆனால் அது பார்ப்பதற்கு  ஷெரின் கிழித்து போட்ட லெட்டர் போல இல்லை. பார்ப்பதற்கு லெட்டரை யாரோ துண்டு துண்டாக வெட்டி வைத்தார் போல இருந்தது.

சிறிது நேரத்திற்கு பின் மன்னராக இருந்த தர்ஷனை அனைவருக்கு சேவை செய்யும் படி பிக்பாஸ் கட்டளையிட்டார். அதன்பின், ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் சிறுசிறு வேலைகளை கொடுத்து தர்ஷனை கடுப்பாக்கிக் கொண்டிருந்தனர்.



பின், தூண்டில் போட்டு மீன் பிடிப்பது போல, வளையத்து போட்டு பந்து பிடிக்கும் டாஸ்க் ஒன்றை பிக்பாஸ் ஹவுஸ்மேட்களுக்கு அளித்தார். மொக்கையான அந்த டாஸ்கில் லாஸ்லியா வெற்றி பெற்றார்.



அதன்பின், போன பிக்பாஸ் சீசனின் ஜனனி மற்றும் ரித்விகா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வீட்டிற்குள் வந்தனர். யாஷிகா மற்றும் மஹத் போல அவர்களும் தமது பட வெளியீடு சம்மதமாகவே வந்தனர்.அவரவர் நடிக்கும் படங்களின் போஸ்டர் மற்றும் டிரைலர் என்பனவற்றை ரீலிஸ் செய்த சிறிது நேரத்தின் பின்னர் பிக்பாஸ் ஐந்து லட்ச ரூபாய் அடங்கிய அந்த பெட்டியை கொண்டு வரும்படி ரித்விகாவுக்கு கட்டளையிட்டார், பின்னர் சிறப்பு விருந்தினர்களை வெளியேறும் படி சொன்னார் பிக்பாஸ்.



இந்த போட்டியில் ஒருவர் மாத்திரேமே ஜெயிக்க முடியும் என்பதனால், மேலும் போட்டியிட தயக்கப்படுபவர்களில் எவரேனும் ஒருவர் அந்த ஐந்து லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறலாம் என அறிவித்தார் பிக்பாஸ். சிறிது நேரம் Pin Drop அமைதியாக இருந்து வீடு. பின்னர், கவின் மட்டும் எழுந்து நிற்க, புரோமோவில் காட்டியது போல ஏனைய ஹவுஸ்மேட்ஸ்கள் "ஏன் இப்படி செய்ற, முதல்ல காரணத்த சொல்லு" என்ற வண்ணம் இருந்தனர்



பின்னர் கவின் கேமாராவைப் பார்த்து "தல நான் போறத்துக்கு ரெடி" என்பதாக இன்றைய எபிசோட் முடிந்தது.





No comments

//]]>