Related posts

Breaking News

ராஜாவாகினார் தர்ஷன் (Bigg Boss Season 3 Tamil- Day 93)


பிக்பாஸின் முந்தைய சீசன்கள் இரண்டுமே மிகவும் ரணகளமாய் முடிந்திருக்க இந்த சீசனும் ஆரம்பத்தில் சண்டை, சச்சரவு என ன தான் துவக்கம் கண்டது. இருப்பினும் இளவயது கூட்டத்தினர் அதிகமாகவும் அதேவேளை நட்பாகவும் இருந்த படியால் கொஞ்சம் 'கலகல' என மாறியுள்ளது.

நேற்றும் (92ம் நாள்) சேண்டியின் அலப்பறைகளுடன் தமாஷாகவே எபிசோட் சென்றது. புலாஹோ ரைஸ் (Puloa Rice) செய்தல் என்ற India Gateன் டாஸ்கில் தலைமை Chefனா சேண்டி, சோறு சமைக்கிறேன் பேர்வழி என ஏதேதோ செய்ய போய் கடைசியில் அத்தனை மசாலாவையும் சோற்றில் கொட்டி கொத்து ரொட்டி போல அதை கொத்தி ரணகளம் பண்ணிவிட்டார். பற்றாத குறைக்கு அதை ஒரு டிஷ்ஷில் நிரப்பி பிக்பாஸுக்கு வேறு கன்வஷன் ரூமில் வைத்து விட்டார்.

இன்றோ, இனிமேல் சேண்டிதான் இந்த வீட்டின் குக் என பிக்பாஸ் அறிவித்தார். அதற்கு கவின் எங்களையெல்லாம் பழிவாங்கவே இப்படி அவர் செய்வதாக சொல்லி புலம்பிக்கொண்டிருந்தார்.



மேலும் போட்டியின் இறுதிகட்டமாகையால் கடினமான டாஸ்குகள் ஏதேனும் கொடுக்கப்படும் என்று பார்த்தால் ஆரம்ப பள்ளி மாணவர்களை போல பலூன் உடைக்க சொல்லிவிட்டார்கள். அதிலும் கூட தர்ஷனே வெற்றி பெற்றார்.



தர்ஷன் ஷெரினை சிங்களத்தில் பேசி கடுப்பாக்கிக்கொண்டிருக்க ஷெரின் ஒன்றும் புரியாமல் முழித்து கொண்டிருந்தார்.யாஷிகா, மஹத் இருவரும் தங்களது பட புரோமோஷன் சகிதம் பிக்பாஸ் வீட்டின் உள்ளே வந்து அலப்பறை செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் சிறப்பு விருந்தினராக வீட்டிற்குள் வந்தாலும் கூட சொல்லிக்கொள்ளும் படியாக எதையும் செய்யவில்லை.



பிக்பாஸ் தயவில் ஒவ்வொருவருக்கும் ஒரு பரிசு கிடைத்தது. முகினுக்கு மைக்கும் கவினும் நான்கு இதய வடிவிலான் பொம்மைகளும் என கிடைக்கப்பெற்றன.

தர்ஷன் பலூன் உடைக்கும் போட்டியில் வெற்றி பெற்றதால் அவரை பிக்பாஸ் பிக்பாஸ் வீட்டின் அரசனாக முடிசூட்டினார் (பலூன உடைச்சா ராஜா ஆகிரலாமா?) ஆக அவர் சொல்லும் வேலைகளை மற்றவர்கள் செய்ய வேண்டும் என கட்டளையிடப்பட்டது. தர்ஷனும் மற்றவர்கள் கலகலப்பாக வேலை வாங்கி அவர்களை கடுப்பாக்கிகொண்டிருந்தார்.



ஷெரினுக்கு கிடைத்த பரிசில் ஒரு Notepad இருந்தது. அதில் இந்த வீட்டில் இருக்கும் யாருக்கும் எதையேனும் ஒன்றை எழுதும் படியும் அதை யாருக்கும் காட்ட தேவையில்லை எனவும் பிக்பாஸ் சொல்லியிருக்க ஷெரினோ மாங்குமாங்கு என்று தர்ஷனுக்கு ஒரு கடிதம் எழுதினார். பின்னர் திடீரென பிக்பாஸ் அதை உரிய நபரிடம் கொடுக்குமாறு உத்தரவிட ஷெரின் ஓடிச் சென்று அந்த கடிதத்தை கிழித்து பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டார்.



Overoll, 93ம் நாளும் நல்ல கலகலப்பாகவே சென்றது. ஒரு வேளை வரும் தினங்களில் மிகவும் கடினமான டாஸ்குகள் கொடுக்கப்படலாம். என்றாலும் இளையவர் படை என்னதான் சண்டை போட்டுக்கொண்டாலும் பின்னர் ஒன்று சேர்ந்துவிடும் என்பதால் ஏனைய நாட்களும் இது போலவே இருக்கும் எனலாம்.

No comments

//]]>