Related posts

Breaking News

மெர்சலான உண்மைகள்


இன்று Times Nowல் "மெர்சல்" படத்தில் வரும் வசனங்களை பற்றி விபரமாக விளக்கமளிக்கப்பட்டதை பார்க்க நேர்ந்தது.அதனை சாராம்சமாகக் கொண்டே இப்பதிவு...

7% GST அறவிடப்படும் சிங்கப்பூரில் இலவச மருத்துவம் சாத்தியமெனில் 28% GST அறவிடும் இந்தியாவில் ஏன் தரமான இலவச மருத்துவத்துவத்தை சாத்தியப்படுத்த முடியவில்லை எனக்கேட்கப்படுகிறது.
தர்க்க ரீதியாக இதை அணுகினால்,சிங்கப்பூரில் 7% GST எனினும் ஒவ்வொரு தனிநபரினது வருமானத்திலும் 8% முதல் 10% வரை மருத்துவத்திற்காக வரி அறவிடப்படுகிறது.எனினும் இங்கே 28% GST வருமான வரி தவிர்த்து அறவிடப்படுகிறது(அதிலும் 5% முதல் 12% மருத்துவத்திற்கு) என்பதுதான் உண்மை.ஆக இந்த குழப்பத்திற்குரிய வசனமும் ஓரளவு சரியானதாகவே இருக்கிறது.

அடுத்து தாய்மாரின் தாலியறுக்கும் சாரயத்திற்கு வரியில்லை ஆனால் மருத்துவத்திற்கு 12%GSTயாம்.இது வெளிப்படையாகவே உண்மையான ஒரு வசனம்.இதில் மறுப்பதற்கேதுமில்லையே.

மேலும்,முதற்தரமான அரச மருத்துவனை என அறியப்படும் அரச மருத்துவமனைகளிலேயே ஓக்ஸிஜன் சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது.இதுவும் உண்மைதான். உத்தர பிரதேசத்தின் கோராக்பூரில் உள்ள அரசமருத்துவமனையில்தான் இந்த தட்டுபாடு நிலவுகிறது.காரணம்,இரண்டு வருடங்களாக உரிய நிலுவையினை அம்மருத்துவமனை நிர்வாகம் செலுத்தவில்லையென்பதே.

டயாலிஸிஸ் அறுவைசிகிச்சையின் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதனால் நால்வர் இறந்தனர்.சமீபத்தில் கூட புதுச்சேரியில் இதே போன்றதொரு சம்பவத்தினால் மூவர் இறக்கவில்லையா? அரசியல்வாதிகளின் காதுகளுக்கு இது எட்டவில்லையா?பவர் பேக்அப் கூட இல்லாமல் சிகிச்சையை தொடங்கிய மருத்துவமனை நிர்வாகத்தை ஏன் எந்த அரசியல்வாதியும் கேள்விகேட்கவில்லை?

ஆந்திர பிரதேசத்தின் குண்டூரில் உள்ள அரச மருத்துவமனையில் பெருச்சாளி கடித்ததால் குழந்தையொன்று இறந்து போனது.இதனை மேலோட்டமாகதான் படத்திலும் அலசி இருந்தனர்.அந்த குழந்தை இறந்த போது போர்கொடி தூக்க எந்த அரசியல்வாதியும் வரவில்லை,பா.ஜ.க இச்சம்பவத்தை குறித்து எந்தவொரு கருத்தையும் பதிவுசெய்யவில்லை.இப்படி எலிகள் தாக்கி குழந்தைகள் இறப்பது இதுவே முதல் முறை என்றில்லை.மத்திய பிரதேசதம் தொடங்கி பல இடங்களில் இதே போன்ற சம்பவங்கள் நடந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

டிஜிட்டல் இந்தியா,அன்றாட தேவைகளுக்கு கூட போதிய பணம் கையிலில்லாமல் ATM முன் நின்றது நினைவில்லையா.அப்படி வரிசையில் நின்றே உயிரை விட்டவர்கள் எத்தனை பேர்.

இப்போது ஒன்றை நன்றாக கவனித்து பாருங்கள்.அரச மருத்துவமனைகள் மேல் உள்ள பயம்தானே தனியார் மருத்தவமனைகளின் மூலதனம்.இதைதானே படத்திலும் குறிப்பிட்டார்கள்.இது நீக்கப்பட வேண்டிய காட்சியல்லவே.
ஆக ஐனநாயக அரசை எதிர்த்து கேள்வி கேட்பது தவறெனில் இந்த தவறு மிகச்சரியே..!


2 comments

jscjohny said...

நன்கு குட்டியிருக்கிறீர்கள்.

Kavind Jeeva said...

தொடர்ந்து நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தோழரே

//]]>