Related posts

Breaking News

ஆளப்போறான் தமிழன்
மெர்சல் படத்தை விமர்சனம் செய்ய டைம்லைனுக்கு 100 பேர் இருக்கிறார்கள்.படமும் ஒன்றும் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை.ஏற்கெனவே பார்த்த 3,4 படங்களை ஒன்றாக பார்த்தது போல்தான் இருந்தது.நிறைய ஹாலிவுட் படங்களின் காட்சிகளை வேறு ரிப்பீட் செய்து வைத்திருக்கிறார்கள்.இதை ஒரு பக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்.மெர்சல் பேசும் அரசியல் நாடுகள் தாண்டி விவாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.நம்மை சுற்றியுள்ள மாய வட்டத்தை உணராத ரசிகர்களும் நாம் அனைவரும் முட்டாளாக்கப்படுகிறோம் என்பதைகூட கவனிக்காமல் கரகோசம் எழுப்புகிறார்கள்.ஒரு சினிமா நடைமுறை அரசியலை,அரசியல்வாதிகளை கேள்வி கேட்ட முடியுமெனில்,ஒரு சாதாரண மனிதனுக்கும் சினிமாவிடமும்,அதனை எடுத்தவர்களிடமும் அதை பார்த்து பரவசம் கொள்ளும் ரசிகனிடமும் கேள்விகள் கேட்க முடியுமென நம்புகிறேன்.

அரசாங்க மருத்துவமனைகளில் கொடுக்க முடியாத தரமான சேவையை தனியார் மருத்துவமனைகளில் எவ்வாறு கொடுக்க முடிந்தது என்ற கேள்வி வாஸ்துவமானதுதான்,ஆனால் ஒரு இராணுவ வீரனுக்கும்,அரச மருத்துவனுக்கும்,நீதிபதிகளுக்கும் வருடம் முழுவதுமே கூட கிடைக்காத சம்பளம் ஒரு சினிமா நடிகனுக்கு ஒரே படத்தில் கிடைக்கிறதே எதனால்.

கோடிகளை கொட்டி Rolls Royce முதல் சந்தையில் உள்ள அத்தனை விலையுயர்ந்த வாகனங்களையும் வாங்குவதென்பதை நாட்டை காப்பாற்ற உயிரை பணயம் வைத்து எல்லையில் போராடும் ஒரு இராணுவ வீரனால் நினைத்து கூட பார்க்க முடியாது,ஆனால் ஒரு சினிமா நடிகனால் முடிகிறேதே,அத்துனை பணம்/அத்தனை உழைப்பு எப்படி அவனிடம் எப்படி சேருகிறது.தலையில் சவரிமயிரை வைப்பவன் எல்லையிர் உயிரை விடுபவனை விட மேலானவன் ஆனது எப்போது.

நாட்டில் பஞ்சம் என்றே சொல்லே கேள்விபடாதவர்கள் தமிழர்கள்.எப்போது,விவசாயம் தலைத்தோங்கிய காலத்தில்.அன்று எந்த வெளிநாட்டவனும் தென்னாசிய நாடுகளில் கால்பதிக்கவில்லை.வியர்வை சிந்தி உழைத்தவனுக்கு நல்ல அங்கீகாரம் இருந்தது.தங்கமும்,வெள்ளியும் மற்றைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.இன்று பவுண் எத்தனை ரூபா என்றாலும் வாங்கிதான் ஆக வேண்டும் என்ற நிலைமை.நம்மிடம் இருந்த செல்வங்கள் எல்லாம் எங்கே போயின,தமிழகத்தில் தண்ணீர் தட்டுபாடு,ஆற்று நீரில் குளித்தவர்கள் நாம் இன்று ஆறுகளே இல்லை எங்கு மறைந்தன அவை?எங்கே தவறினோம்? தகுதியில்லாதவனிடம் நாட்டை எப்போது கொடுக்க தொடங்கினோமோ அன்றுதான்.நாட்டு பிரச்சினையை வீட்டு பிரச்சினை போன்று அக்கறையுடன் அணுகாத போனோமே அப்போதுதான்.

எந்நாளும் எம்.ஜி.ஆர்கள் தோன்றுவதில்லை.அவர் ஒரு விதிவிலக்கு.இங்கு பணம் பண்ணும் வியாபாரிகள்தான் அதிகம்.கருப்பு பணத்தில் வாழ்க்கையை ஓட்டும் நடிகர்களிடம் நாட்டை கொடுக்கலாமா.சாதாரணமானதொரு பியூன் வேலைக்கே எத்தனை தகுதிகளை எதிர்பார்க்கிறோம்.ஒரு நாட்டின் பிரதமரை,120 கோடி மக்கள் வாழும் ஒரு நாட்டின் பிரதரை எப்படி தேர்ந்தெடுக்கிறோம்,7 கோடி பேர் கொண்ட தமிழக முதல்வரிடம் என்னென்ன தகுதிகளை நாம் எதிர்பார்க்கிறோம்.பத்தாம் வகுப்பு கூட பாஸ் ஆகதவனிடம் நாட்டை கொடுக்கலாமா.நம்மில் எத்தனை பேர் தேர்தலில் வாக்குகளை பதிவு செய்யும் முன் நாம் வாக்களிக்க தகுதியான நபர் யார் என ஆராய்கிறோம் அல்லது தேர்தல் கேண்டிடேட்கள் அனைவரினதும் கடந்த காலங்களையும் தகுதிகளையும்தான் ஆராய்கிறோமா.வாரவாரம் படங்களை பார்த்துவிட்டு ரேட்டிங் போட தெரிந்த நமக்கு ஏன் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை வேட்பாளர்களை ரேட்டிங் செய்து வாக்களிக்க முடிவதில்லை.

இறுதியாக உரக்க ஒரு முறை சொல்கிறேன்.எப்போதும் எங்கள் கைகள் வீழந்திருக்க போவதில்லை.ஒரு நாள் அவை ஓங்கும்.நாம் மாய விம்பங்களை கட்டுடைப்போம்.அன்று நமக்கு கேடு விளைவித்தவர்கள் பாதாளத்தில் தள்ளப்படுவார்கள்.அன்று அரசாளாப்படும் தமிழர்களால் அல்ல நல்ல மனிதர்களால்.

No comments

//]]>